டைரக்டர் மேல செம டென்ஷனில் தயாரிப்பாளர்.. இனிமே அவன் ஆபிஸ் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரா?

By Staff

சென்னை: வழக்கம் போல பில்டப்புக்காகவே பாக்ஸ் ஆபிஸ் கணக்கை எல்லாம் சொல்லி வந்தாலும் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தின் மூலமாக எதிர்பார்த்த லாபத்தை தயாரிப்பு நிறுவனம் பெறவே இல்லாதது தயாரிப்பாளரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

வெளிநாடுகளில் குறைந்த விலைக்கு படத்தை வாங்கி பெத்த லாபத்தை சில விநியோகஸ்தர்கள் பார்த்து செம ஹேப்பியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு வாரம் கூட வசூல் வரவில்லையே என தயாரிப்பாளர் கடும் டென்ஷனில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Producer angry on Director due to his recent poor movie and over buildups

குறிப்பாக டைரக்டர் மீது தான் தயாரிப்பாளர் செம காண்டில் இருப்பதாகவும், அவரை இனிமேல் ஆபிஸ் பக்கமே வர வேண்டாமென சொல்லிடுங்க என்றே தனது உதவியாளரிடம் கடுப்படித்து விட்டார் என காத்துவாக்குல கிசுகிசுக்கள் கோடம்பாக்கம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளன.

சொன்னது ஒண்ணு செஞ்சது ஒண்ணு: தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த டைரக்டர் என ஓவர் பில்டப்புடன் தயாரிப்பாளரை அணுக உச்ச நட்சத்திரமே உறுதியா இருக்காரே என எந்தவொரு கண்டிஷனும் போடாமல் டைரக்டர் கேட்கும் பட்ஜெட்டை வாரி இரைத்தாராம் தயாரிப்பாளர். தேவையில்லாத கேமியோ மற்றும் கவர்ச்சி பாட்டுக்கு என பட்ஜெட் அதிகமாகவே ஆகிவிட்டது என்கின்றனர். ஆனால், டைரக்டரிடம் தயாரிப்பாளர் எதிர்பார்த்த அந்தவொரு விஷயத்தைக் கூட அவர் செய்யாதது தான் தயாரிப்பாளரை கொலை காண்டில் ஆக்கியிருப்பதாக கூறுகின்றனர்.

பணம் பெரிய மேட்டர் இல்லை: அந்த தயாரிப்பாளரை பொறுத்தவரை பணமெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லையாம். எப்படியாவது அடுத்த புராஜெக்ட்டை பிசினஸ் செய்து கலெக்‌ஷனை சரி கட்டிவிடுவார் என்கின்றனர். ஆனால், ஓவர் பில்டப் செய்துவிட்டு உருப்படியாக படத்தை எடுத்துக் கொடுக்காமல் இயக்குநர் பண்ண அலப்பறையை தான் தயாரிப்பாளரால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை என்கின்றனர்.

அடுத்த படம் நிறுத்தி வைப்பு?: தனது படம் டல்லடிக்க ஆரம்பித்த நிலையில், அடுத்த படம் குறித்த தகவல்களை லீக் செய்து வைரலாக்கியதே அந்த டைரக்டர் பார்த்த வேலை தான் என்கின்றனர். இதுதொடர்பாக உச்ச நடிகரிடம் தயாரிப்பாளர் பேச, அடுத்த பட அறிவிப்பை இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்றும் அந்த மேட்டரை அப்படியே ஆஃப் பண்ணிடுங்க என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டு விட்டாராம். அதிகபட்சம் டைரக்டரையே மாற்றினாலும் மாற்ற வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X