இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாது.. கடுப்பான தயாரிப்பாளர்.. டார்ச்சர் பண்ணும் டாப் நடிகர்?

By Staff

சென்னை: கடந்த இரு வாரங்களாக திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் காத்து வாங்க ஆரம்பித்த நிலையில், இனியும் இந்த படத்துக்கு முட்டுக் கொடுக்கும் அவசியமில்லை என கப்சிப் ஆகி இருந்த தயாரிப்பாளரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறதாம் டாப் நடிகரின் தரப்பு.

போட்டா போட்டியாக படத்தை இறக்க வேண்டாம் என தயாரிப்பாளர் தலையால் அடித்துக் கொண்ட நிலையிலும், தனது கெத்தைக் காட்ட டாப் நடிகர் பண்ண வேலையால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி விட்டதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே இரு படத்துக்கு போட்ட பணமும் திவால் ஆன நிலையில், இந்த படமாவது பெரும் தொகையை வசூல் செய்யும் என்று நினைத்த நிலையிலும் நடிகரின் செயலால் தயாரிப்பாளர் தலையில் பெரிய துண்டு விழுந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகர் தரப்பு கொடுத்த பிரஷர்

நடிகர் தரப்பு கொடுத்த பிரஷர்

மாஸ் நடிகர் தரப்பு வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், டாப் நடிகர் தரப்பு தயாரிப்பாளரை பாடாய் படுத்தி எடுத்து விட்டதாம். கடந்த முறை சொன்னதை போலவே இந்த முறையும் புருடா விடுங்க என நச்சரிக்க இதற்கு மேல் நான் பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது என பொசுக்குன்னு சொல்லி நடிகர் தரப்பை அசிங்கப்படுத்தி விட்டாராம் தயாரிப்பாளர்.

காசெல்லாம் போச்சு

காசெல்லாம் போச்சு

டாப் நடிகர் படத்தை தயாரித்து வெளியிட்டால் பெத்த தொகையை சம்பாதிக்கலாம் என பறந்து வந்த அந்த தயாரிப்பாளரை எந்த அளவுக்கு வச்சு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வச்சு செய்து அனுப்பி விட்டாராம் டாப் நடிகர். தனது காசெல்லாம் கரியாப் போச்சு என தயாரிப்பாளர் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறாராம்.

கப்சிப்

கப்சிப்

படம் ரிலீஸாகி முதல் வாரம் தாண்டிய நிலையில், அதன் பின்னர் படத்தை பார்க்க கூட்டமே தியேட்டருக்கு வராத நிலையில், பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கி விட்டதாம். அதன் பிறகு படத்தை புரமோட் செய்வதில் எந்த பயனும் இல்லை என நினைத்த தயாரிப்பாளர் 10 நாளுக்கும் மேலாக கப்சிப் ஆகி வேற பிசினஸை கவனிக்க போய் விட்டாராம்.

பாலிவுட் படம் பாதியில்

பாலிவுட் படம் பாதியில்

இந்த படத்தின் மூலம் நல்ல வருமானம் வந்தால் பாலிவுட் படத்தை முடித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் தற்போது அந்த விளையாட்டு படத்தை முடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். அந்த பாலிவுட் படம் அப்படியே பாதியில் கிடக்க அந்த படத்தின் நாயகன் அடுத்தடுத்து பல படங்களை முடித்து புதிய படங்களில் நடித்து வருகிறாராம்.

தொடர்ந்து டார்ச்சர்

தொடர்ந்து டார்ச்சர்

பாக்ஸ் ஆபிஸ் நம்பர் சொல்லுங்க என்றும் படத்திற்கான ப்ரோமோஷனை தொடர்ந்து பண்ணுங்க, சும்மா விட்டா நல்லா இருக்காது. எதிர் டீம் மோசமாக கலாய்த்து வருகிறது என டாப் நடிகரின் மேனேஜர் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு தொல்லைக் கொடுத்து வந்த நிலையில், தான் லேட்டஸ்டாக ஒரு வீடியோவையே தயாரிப்பாளர் ஷேர் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

முட்டுக் கொடுக்க முடியாது

முட்டுக் கொடுக்க முடியாது

அந்த நடிகரை வைத்து இதுவரை பட்டதே போதும். இதற்கு மேல் என்னால் முட்டுக் கொடுக்க முடியாது என பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பு விவகாரத்தில் கறாராக சொல்லி விட்டாராம் தயாரிப்பாளர். ரொம்ப டென்ஷன் பண்ணீங்கனா ஒரிஜினல் நம்பரை போட்டு விடட்டுமா என கேட்க நடிகரின் தரப்பு அப்படியே ஆஃப் ஆகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X