»   »  இனி பெரிய ஹீரோக்கள் வேண்டாம்... பின்வாங்கும் நிறுவனங்கள்!

இனி பெரிய ஹீரோக்கள் வேண்டாம்... பின்வாங்கும் நிறுவனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்படி ஒரு மாற்றம் வந்தால்தான் தமிழ் சினிமா உருப்படும்... நல்ல படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்ததுதான். அது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

தல நடிகரை வைத்து படம் தயாரித்த வகையில் பெரும் நஷ்டமாம் அந்த பழம்பெரும் நிறுவனத்துக்கு. அடுத்து படம் தயாரித்தால் அந்த படம் ரிலீஸின்போது பாதிக்கப்படும் என்னும் அளவுக்கு இருக்கிறது. எனவே இனி பெரிய ஹீரோக்களே வேண்டாம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள்.

இதேபோல் தளபதியை வைத்து படம் எடுத்த நிறுவனத்துக்கும் படத்தின் பட்ஜெட் விஷயத்தில் கடும் அதிருப்தியாம். பெரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பட்ஜெட்டையும் இஷ்டத்துக்கு ஏற்றிவிட்டு விட்டாராம் இயக்குநர். ஹீரோ கேட்பார் என்று நினைத்தால் அவரோ இதில் தலையிட மாட்டேன் என்று சொல்லியதால் இனிமேல் இது மாதிரியான ஹீரோ படமே வேண்டாம் என்ற லெவலுக்கு போய்விட்டார்களாம்.

இனி இதுபோன்ற பெரிய ஹீரோக்களை தயாரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முன்வரும். அவர்களும் பட்ட பிறகே திருந்துவார்கள்.

English summary
Due to continous loss, production companies are avoiding to produce movies with top heroes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil