Don't Miss!
- Finance
தங்கம் விலை அதிகரிப்பால் இப்படி ஒரு நல்ல விஷயமும் இருக்கா.?
- News
எல்லாம் ஓவர்.. தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் ஈரோடு கிழக்கு! அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்!
- Sports
கல்யாணத்திற்கு ரெடி ஆகுங்க .. சுப்மான் கில்லை அழைக்கும் சச்சின்.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்
- Lifestyle
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
- Automobiles
இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!
- Technology
ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
90 சதவீத வசூலை சம்பளமா கேட்டா எப்படி.. டாப் நடிகருக்கு திடீரென செக் வைத்த தயாரிப்பு நிறுவனம்?
சென்னை: டாப் நடிகரின் மார்க்கெட் இன்னமும் வளராத நிலையில், தனக்கும் பெரிய தொகை சம்பளமாக வேண்டும் என அடம்பித்த நிலையில், அடுத்த படத்தின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், டாப் நடிகர் சவால் விட்ட அளவுக்கு சமீபத்தில் வெளியான படத்தின் வசூல் பெரிதாக கலெக்ஷன் செய்யாத நிலையில், அடுத்த படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பு நிறுவனம் சம்பள குறைப்பு விஷயத்தில் கறார் காட்டி வருவதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், அடுத்த படமும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எடுக்கும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லாத நிலையில், சம்பளத்தை குறைத்தே ஆக வேண்டும் என கண்டிப்பாக சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.
லத்தி,
கனெக்ட்
பாக்ஸ்
ஆபிஸ்:
காத்து
வாங்கும்
தியேட்டர்கள்...
முடிவுக்கு
வருகிறதா
நயனின்
மார்க்கெட்?

வசூலில் பின்னடைவு
மாஸ் நடிகருடன் மோதி பார்த்து விடலாம் என்கிற முடிவுடன் தனது படத்தை இந்த முறை வேண்டுமென்றே போட்டா போட்டி போட்டு களமிறக்கினார் டாப் நடிகர். ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வசூல் வராத நிலையில், தயாரிப்பாளர் அமைதியோ அமைதி என பழையபடி நான் ராஜஸ்தானுக்கே போறேன் என கிளம்பி விட்டாராம்.

போட்டி போடாமலிருந்தால்
இப்போது வந்த வசூலை விட இன்னும் பல மடங்கு அதிக வசூல் தனியாக ரிலீஸ் செய்திருந்தால் வந்திருக்கும் என பலரும் அறிக்கைகளை சமர்பித்துள்ள நிலையில், தயாரிப்பாளர் நடிகரின் பிடிவாதத்தை நினைத்து ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். ஆனால், போட்டி இருந்த நிலையில் தான் இந்த அளவுக்கு ரசிகர்கள் படத்தை ஓட வைத்து வருகின்றனர். இந்த வசூலே நல்ல வசூல் தான் என நடிகர் தயாரிப்பாளரை சமாதானம் செய்து அனுப்பி உள்ளாராம்.

சம்பளத்தை குறைங்க பாஸ்
இந்த படம் எப்படியும் பெரிய வெற்றி பெறும் என பில்டப் செய்தே அடுத்த படத்திற்கான சம்பளத்தை அதிகரித்து இருந்தார் டாப் நடிகர். அவரின் பேச்சை நம்பியே வெளிநாடுகளிலும் அந்த படத்தை பெரியளவில் ப்ரோமோட் செய்த தயாரிப்பு நிறுவனம் தற்போது வசூலை பார்த்து அப்செட் ஆன நிலையில், அடுத்த படத்தின் சம்பளத்தில் கை வைத்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய பிசினஸ் இல்லை
முன்னணி நடிகர்களுக்கு இணையான பெரிய பிசினஸ் வெளிநாடுகளிலும் பக்கத்து ஸ்டேட்களிலும் அந்த நடிகருக்கு இன்னமும் ஓபன் ஆகாத நிலையில், வம்படியாக அதிக சம்பளம் கேட்பதும், போட்டி நடிகருக்கு இணையாக தனக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என அடம்பிடிப்பதும் வியாபாரத்திற்கு உகந்தது அல்ல என டாப் நடிகரிடம் தெளிவாக சொல்லி விட்டதாம் அந்த தயாரிப்பு நிறுவனம்.

நம்பிக்கை இல்லை
டாப் நடிகர் தனது அடுத்த படத்தையும் அந்த காதல் இயக்குநர் தான் இயக்க வேண்டும் என அடம்பிடித்த நிலையில், அவர் இயக்கத்தில் உருவாக உள்ள படமும் நிச்சயம் பெரிய தொகையை வசூல் செய்யும் என்கிற எந்தவொரு நம்பிக்கையும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இல்லையாம். குறைவான பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் நீங்க கொஞ்சம் இறங்கி வாங்க என நடிகரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

கடுப்பான நடிகர்
தயாரிப்பு நிறுவனம் திடீரென இப்படியொரு நெருக்கடியை கொடுத்துள்ள நிலையில், நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். எப்படியாவது அந்த நடிகரை இந்த முறை முந்திவிடலாம் என போட்ட திட்டமெல்லாம் வீணாய் போய் விட்டதே என நினைத்த அவர் சம்பளத்தை குறைக்க மனமில்லாமல் தயாரிப்பு தரப்பிடம் வேறு சில யோசனைகளை வழங்கி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

லாபத்தில் ஷேர்
குறைந்த பட்ஜெட்டில் படத்தை பக்காவாக எடுத்து விடலாம். பெரிய தொகை லாபமாக வந்தால் அதிலிருந்து 40 சதவீத தொகையை கூட சம்பளமாக எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால், நீங்கள் கேட்கும் சம்பளம் 90 சதவீத தொகையாக இருப்பதால் தான் ரொம்பவே சிக்கலாக இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து நடிகருக்கு மார்க்கெட் நிலவரத்தை புரிய வைத்து வருகிறது என்கின்றனர். அடுத்த படத்திற்கும் இப்பவே சிக்கல் ஆரம்பித்து விட்டது.