»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

அலைகள் ஓய்வதில்லையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்த கார்த்திக்கும், ராதாவும் தங்களது வாரிசுகளை ஜோடியாகஒரே படத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

தமிழ் சினிமாவில் கார்த்திக், ராதாவுக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருந்தது. இருவரும் காதலிப்பதாகக் கூட செய்திகள் வந்தன. வயசும், உடம்பும் ஏறத்தொடங்கியதாலும், புது நடிகைகளின் வரவு பெருத்ததாலும், பீல்டை விட்டு வெளியேறி, கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய் விட்டார்ராதா.

கார்த்திக் சில பல வஸ்துகளுக்கு அடிமையானார். அவரை விட வயதில் மூத்த நடிகைகளுடன் இணைத்து வதந்திகள் வேறு. மொத்தத்தில் தானாகவே பீல்ட்அவுட் ஆகிவிட்டார்.

ஆனால், கார்த்திக்கின் மகன் கெளதம், அப்பா மாதிரியே (பழைய கார்த்திக்) படு ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்சம்மாக இருக்கிறாராம். பள்ளிப் படிப்பைமுடித்து விட்டு நடிப்பிற்குத் தயாராகிவிட்டார்.

இந் நிலையில் புதிதாக ஒரு பேச்சு. கார்த்திக்கின் மகனும், கார்த்திக்குடன் பல படங்களில் ஜோடியாக நடித்து கலக்கிய ராதாவின் மகளும் சேர்ந்து ஒருபடத்தில் ஹீரோ- ஹீரோயினாக அறிமுகமாகப் போவதாக சொல்கிறார்கள்.

அக்கா அம்பிகா அமெரிக்க மாப்பிள்ளையுடன் கல்யாணத்தை நீண்ட காலத்துக்கு முன்பே முறித்துக் கொண்டு ஊர் திரும்பி தமிழ், மற்றும் சொந்தமொழியான மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். கூடவே வடிவேலு போன்றவர்களுடன் அவ்வப்போது கிசுகிசுக்கப்படுகிறார்.

தங்கை ராதாவைப் பொறுத்தவரை முன்பு அமெரிக்காவிலும் பின்னர் மும்பையிலுமாக கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அம்பிகாவைப் போலதிருமண வாழ்வில் தடுமாற்றம் இல்லாத ராதா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், அவரது மகள் நடிக்க வரப் போகிறார் என்று கோடம்பாக்கம் குருவிகள் கூறுகின்றன.

விசாரித்துப் பார்த்தால், ராதாவின் மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார், அவரை சினிமாவில் நடிக்க வைக்கும் ஆர்வம் ராதாவுக்கு இல்லைஎன்று தகவல் கிடைக்கிறது.

இந்தச் செய்தி எப்படிப் பரவியது என்று கார்த்திக் தரப்பும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. ராதாவைப் பார்த்தே பல வருஷமாச்சு, அப்படி இருக்கையில்அவரது மகளும், எனது மகனும் இணைந்து நடிப்பதா யார் கிளப்பி விட்டது என்று தெரியலையே என்கிறது கார்த்திக் தரப்பு.

சினிமாவில் இல்லை, இல்லை என்று சொன்னால் ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் என்ற இலக்கணம் இந்த விஷயத்திலும் உண்மையானாலும்ஆச்சரியமில்லை.

சரி, கார்த்திக் என்ன தான் செய்து கொண்டிக்கிறார். அதிமுகவில் சேரும் முயற்சி வெற்றி பெறாத நிலையில் ரொம்பவே சோர்ந்து போய் இருக்கிறர்.

அவரும் வயசு போன காலத்தில் அவருடன் கவர்ச்சியாய் நடித்த கெளசல்யாவும் பெரிதும் எதிர்பார்த்த மனதில் படத்தை வாங்க ஆளில்லை. இதனால் அந்தப்படம் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. கூடவே கார்த்திக்-தனுராய் நடித்த ஒரு படமும் பெட்டியில் சுருண்டு கிடக்கிறது.

இதனால் நொந்து போன கார்த்திக், சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பொழுதை போக்கி வருகிறார்.

சமீபத்தில் தனது குருநாதர் பாரதிராஜாவிடம் போய் சரண்டரானாராம். நீண்டகாலமாக ஒரு வெற்றிப் படத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்பாரதிராஜாவும் கார்த்திக்கை வைத்து ஒரு வித்தியாசமான படத்தை கொடுக்க முடிவு செய்துவிட்டார்.

படத்தில், புதுமுக இளம் ஜோடிகளைப் போட்டுவிட்டு கார்த்திக்கிடம் ஒரு வெயிட்டான கேரக்டர் ரோலை தர இருக்கிறார் பாரதிராஜா.

படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை நெருக்கி வருகிறார் பாரதிராஜா. ஆனால், என்ன காரணமோ ராஜா இன்னும் ஓ.கே.சொல்லவில்லையாம். ஆனால், சொல்லுவார் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

Read more about: karthik, radha, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil