»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெற்றியில் எப்போதும் தனது மண்டை சைசுக்கு கும்குமம் பூசிக் கொண்டு ஆன்மிக சக்கரவர்த்தியாகக் காணப்படும் நடிகர் மற்றும் அதிமுகஎம்.எல்.ஏவான ராதாரவி தூத்துக்குடியில் ஒரு லாட்ஜில் பெண்ணுடன் பிடிபட்டார்.

தூத்துக்குடிக்கு அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்த அவர் ஹோட்டல் சுகத்தில் தங்கினார். இந்த ஹோட்டலின் உரிமையாளர்ஜேசுகந்தா போயஸ் தோட்டத்துக்கு நன்கு அறிமுகமானவர். ஜெயலலிதா தூத்துக்குடி வந்தபோது அவர் தங்குவதற்காக ஹோட்டலில் 2புதிய அறைகளைக் கட்டிக் கொடுத்தவர் இவர்.

இந்த விவரம் தெரியாத ராதாரவி தூத்துக்குடியில் ஒரு அழகு நிலையத்தில் பணிபுரியும் அந்த மாதிரி பெண்ணை அழைத்துக் கொண்டுலாட்ஜூக்கு வந்துள்ளார்.

அவரும் இந்தப் பெண்ணும் குஜால் செய்து கொண்டிருக்க அதை அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் ராதாரவியின் அறைக் கதவைத் தட்டினர்.கோபத்துடன் வெளியே வந்த ராதாரவியிடம் உடனே அந்தப் பெண்ணை வெளியில் அனுப்புங்கள் என ஊழியர்கள் கூற அவர்களை திட்டிவிரட்டியுள்ளார் ராதாரவி.

இதையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஜேசுகந்தா வந்து, கெளரவமான இந்த ஹோட்டலில் விபச்சாரப் பெண்களை அனுமதிக்கமுடியாது. அந்தப் பெண்ணை உடனே வெளியில் அனுப்புங்கள் என்று கூறியும் ராதாரவி கேட்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து திருச்செந்தூரில் தங்கியிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்பு கொணட ராதாரவி ஹோட்டல் அதிபரை தட்டிவைக்குமாறு கூறியுள்ளார்.

அவரும் உடனே ஹோட்டல் அதிபர் ஜேசுகந்தாவைத் தொடர்பு கொண்டு தனது அமைச்சர் பந்தாவைக் காட்டியிருக்கிறார்.

அப்போது தான் தனது செல்வாக்கைக் காட்டியுள்ளார் ஜேசுகந்தா. முதல்வருக்காக இந்த ஹோட்டலில் இரு அறைகளைக் கட்டிவைத்திருப்பவன் நான், அவர் இங்கு தங்கும்போது பூஜை, புணஸ்காரங்களில் ஈடுபடுவார் என்பதற்காகவே அந்த அறைகளை எப்போதும்பூட்டியே வைத்திருக்கிறேன். இது முதல்வருக்கும் தெரியும்.

உடனே அந்த விபச்சாரப் பெண்ணை ராதாரவி வெளியே அனுப்பாவிட்டால் முதல்வரிடம் நான் இப்போதே தொலைபேசியில் பேசுவேன்என்று கூற வெலவெலத்துப் போன அமைச்சர் உடனே அதிமுகவினரை ஹோட்டலுக்கு அனுப்பி ராதாரவியை அங்கிருந்து வெளியேறச்செய்துள்ளார்.

ஹோட்டல் அதிபர் போயஸ் தோட்டத்தில் செல்வாக்கு மிக்கவர் என்று தெரிந்தவுடன் பதறிப் போன ராதாரவி உடனே அந்தப் பெண்ணைவெளியில் அனுப்பிவிட்டு தானும் 10 நிமிடத்தில் ரூமை காலி செய்து கொண்டு ஓடியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது ராதாரவி புல் மப்பில் இருந்ததாகத் தெரிகிறது. அத்தோடு ராதாரவி அடங்கவில்லை என்பது தான் சுவாரஸ்யம்.

மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஹோட்டல் சுகம் மற்றும் அதன் உரிமையாளரைத் தாக்கிப்பேசியுள்ளார். அதிமுக கட்சிக் கூட்டத்தில் ஏன் ஒரு ஹோட்டலைத் திட்டிப் பேசுகிறார் ராதாரவி என்று தெரியாமல் தொண்டர்கள்குழம்பிவிட்டனர்.

ராதாரவியின் இந்தச் செயலால் எரிச்சலைந்துவிட்ட ஜேசுகந்தா உடனே இது குறித்து போயஸ் தோட்டத்துக்கு தகவல் கொடுத்துவிட்டாராம்.ராதரவிக்கு விரைவில் ஆப்பு வைக்கப்படும் என்பது உறுதி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil