»   »  ரகஸ்யாவின் கவர்ச்சிக்கு கமல் தடை

ரகஸ்யாவின் கவர்ச்சிக்கு கமல் தடை

Subscribe to Oneindia Tamil

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் மும்பை அழகி ரகஸ்யாவின் கவர்ச்சிக்கு கமல் தடை போட்டுள்ளார்.

கமல் நடித்து வேகமாக முடிந்த படங்களில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படமும் ஒன்று. பெரும்பாலும் குறுகிய காலத்தயாரிப்பு என்றால் படத்துக்கு போதிய பப்ளிசிட்டி கிடைக்காது. படத்தைப் பற்றிய 2.3 நியூஸ் பத்திரிக்கைகளில்வருவதற்கு முன்பே படம் ரிலீஸ் ஆகிவிடும்.

படம் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி விளம்பரம் கிடைத்தால்தான் உண்டு. ஆனால் வசூல்ராஜாவுக்குகமல் சிரமப்படாமலேயே அதிக விளம்பரம் கிடைத்துவிட்டது. எல்லாம் டாக்டர்களின் புண்ணியம்தான்.

பெயரை நீக்க வேண்டும் என்று அவர்கள் அடம்பிடித்து, கோர்ட்க்குப் போனதிலும், பத்திரிக்கைகளில் மாறி மாறிபேட்டி கொடுத்ததிலும், கமலுக்கு 5 பைசா செலவு இல்லாமல் செமை பப்ளிசிட்டி கிடைத்தது. முதலில் இடைக்காலத்தடை விதித்த கோர்ட் பின்னர் தடையை விலக்கிக் கொண்டது.

இதனால் கமல், இயக்குநர் சரண் மற்றும் தயாரிப்பாளர்கள் படு குஷியாக உள்ளனர்.

படத்தில் மும்பையைச் சேர்ந்த பெல்லி டான்ஸ் அழகி ரகஸ்யாவின் அட்டகாசமான குத்தாட்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்னேகாவிடம் கவர்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்பதால் சரண் இவரை புக் செய்திருக்கிறார்.

சிரிச்சு சிரிச்சு வந்தாள் சீனா தானா டோய் என்ற பாடலுக்கு பிரபு மற்றும் அழகிகளுடன் சேர்ந்து தூள்கிளப்பியிருக்கிறார் ரகஸ்யா. இந்தப் பாடலை நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ் பாடியிருக்கிறார்.

படத்தில் ரகஸ்யாவுக்கு வேறு காட்சிகள் ஏதும் கிடையாது. சிங்கிள் டான்ஸ் மட்டும்தான்.

இந்தப் பாட்டைப் பார்த்த கமல் ஷாக் ஆகி விட்டாராம். நம்ம படத்துல இப்படி ஒரு கவர்ச்சி ஆட்டமா என்றுஅரண்டு போன அவர் சரணைக் கூப்பிட்டு கவர்ச்சியை குறைத்து விடும்படி கூறி விட்டாராம்.

ஸ்னேகாவுடனான முத்தக் காட்சிகளே நிறைய இருக்கும்போது ரகஸ்யாவின் ஆட்டமும் சேர்ந்தால், படத்திற்கு காமமுத்திரை குத்தப்பட்டு விடும் என்ற பயம்தான் கமலுக்கு.

மொத்தப் படத்தையும் எடுத்த பின்பு ரஷ் பார்த்த கமலுக்கும், சரணுக்கு ஏக திருப்தி. வயிறு குலுங்கிச் சிரிக்கவைக்கும் வகையில் படம் இருக்கும் என்று கியாரண்டி தருகிறார் சரண்.

படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil