»   »  முழு விபரம்

முழு விபரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் ரிலீசாகும் சந்திரமுகிக்கு எதிராக கன்னடத்தில் வெளியான ஆப்தமித்ரா படத்தை தெலுங்கில் டப்செய்து நாகவல்லி என்ற பெயரில் வெளியிட முயற்சி நடக்கிறது.

மலையாள கதாசிரியரான மது முட்டம் கதை எழுதிய மணிச்சித்ரத்தாள் முதலில் மலையாளத்தில் படமாகஎடுக்கப்பட்டது. இது வெற்றிகரமாக ஓடவே, கதையை சுட்டார் பி.வாசு.

ஆப்தமித்ரா என்று பெயர் சூட்டி கன்னடத்தில் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார் வாசு. படத்தைப் பார்த்த ரஜினிவியந்து போய் அதை தமிழில் எடுத்துத் தருமாறு வாசுவிடம் கூறினார்.

இதையடுத்து சந்திரமுகிக்கு பூஜை போடப்பட்டது. ஆனால், மது முட்டம் போர்க்கொடி தூக்கினார். தனது கதையைமுதலில் சுட்டு கன்னடத்தில் எடுத்த வாசு இப்போது தமிழிலும் படமாக எடுப்பதாக அவர் புகார் கூறினார்.

இதனால் கேரளாவில் சந்திரமுகியை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சிவாஜி குடும்பம் தயாரிக்கும்படம் என்பதால் மலையாள திரையுலகினரை ரஜினி பேசி சமாதானப்படுத்தியுள்ளார்.

ஆனால், இப்பவும் சந்திரமுகி தனது கதை என்றும், ஆப்தமித்ராவை அடிப்படையாக வைத்துஎடுக்கப்படுவதாகவும் தான் சின்னதம்பி வாசு கூறிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில், சந்திரமுகிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதுவும், ஆப்தமித்ரா படத்தினால் தான்.

கன்னடத்தில் ஆப்தமித்ரா படத்தை பிரபல நடிகர் பிளஸ் தயாரிப்பாளர் துவாரகீஷ் தயாரித்தார். இதில்விஷ்ணுவர்த்தன், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். வாசுதான் இயக்கினார்.

கதை உரிமையை வாசு வைத்திருந்தாலும், படத் தயாரிப்பாளர் என்ற வகையில், இந்தப் படத்தை பிற மொழியில்எடுத்தால் தனக்கும் ஒரு குறிப்பட்ட அளவு பணம் தர வேண்டும் என துவாரகீஷ் ஒப்பந்தம் போட்டதாகத்தெரிகிறது.

ஆனால், சந்திரமுகியை எடுக்கும் வாசு, ஒப்பந்தப்படி பணத்தை துவாரகீசுக்கு கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் கடுப்பான துவாரகீஷ் வாசுவுக்கு அதிர்ச்சி தர சூப்பர் ஐடியா ஒன்றை அமல்படுத்த முனைந்துள்ளார்.கன்னட ஆப்தமித்ராவை தெலுங்கில் டப் செய்து, சந்திரமுகிக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.

படத்திற்கு நாகவல்லி என்றும் பெயர் வைத்துள்ளார்களாம். செளந்தர்யாவுக்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள்உண்டு. மேலும் கன்னட நடிகர்கள் தெலுங்கில் நடிப்பதும் உண்டு.

இதனால் செளந்தர்யா நடித்த கடைசிப் படம் என்று விளம்பரம் செய்தே நாகவல்லியை ஓட்டி விட அவர்துவாரகீஷ் முடிவு செய்துள்ளாராம்.

இதனால் பி.வாசு மற்றும் பிரபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப் பிரச்சனை குறித்து ரஜினியிடம் வாசு,பிரபு, ராம்குமார் ஆகியோர் விவாதித்துள்ளனர். அவரும் குழம்பிப் போயுள்ளார்.

துவாரகீஷிடம் கன்னடத்தில் ரஜினி மாத்தாடி பார்த்துள்ளார். அவர் பிடிவாதமாக இருக்கவே, தனது தெலுங்குநண்பரான மோகன் பாபுவை போனில் பிடித்து மேட்டரைப் போட்டுள்ளார் ரஜினி.

துவாரகீஷை நான் பார்த்துக் கொள்கிறேன். சந்திரமுகிக்கு முன்பாக நாகவல்லி ரிலீஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது எனது பொறுப்பு என்று மோகன்பாபுவும் ரஜினிக்கு உறுதியளித்துள்ளாராம்.

கன்னடத் திரையுலகினர் சமீபத்தில் பிற மொழிப் படங்களுக்கு தடை விதித்து அலம்பல் செய்ததுநினைவிருக்கலாம். அப்போது தெலுங்குத் திரையுலகினர், கன்னடப் படங்களை தெலுங்கில் வெளியிட அனுமதிக்கமாட்டோம், கன்னடத் திரையுலகினருக்கு தெலுங்கில் இடம் கிடையாது என்று அதிரடியாக அறிவித்தனர்.

அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தி நாகவல்லியை தடை செய்ய மோகன்பாபு களம் இறங்கியுள்ளதாககூறப்படுகிறது.

ஒரு படத்துக்கு இவ்வளவு பிரச்சினைகளா?

Read more about: chandramukhi hurdle rajini vasu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil