»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிறம் (லைலா), திடம் (ரம்பா), மணம் (ஜோதிகா) ஆகிய 3 சுவைகளும் அடங்கிய "த்ரீ ரோஸஸ்" படத்தின் கதைஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டு விட்டதாம்.

இதனால் அப்செட் ஆகிப் போன ஜோதிகா நடிக்க மறுத்து வருகிறாராம். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில்ரம்பா புகார் கொடுத்துள்ளார்.

சார்லீஸ் ஏன்ஜெல்ஸ் என்ற படத்தை உல்டா செய்து திரீ ரோஸஸ் என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தனர் ரம்பாவும்,அவரது அண்ணனும். இதில் சம்பளத்தை ஒழுங்காகத் தராமல் ரம்பாவின் அண்ணன் மோசடி செய்ய லைலா பைட்செய்து தனது பாக்கியை வாங்கினார்.

இந் நிலையில் படம் ரொம்ப மெதுவாக வளர்ந்து வந்தது. ஷூட்டிங் ஓரளவு முடிந்த நிலையில் ரஷ் போட்டுப்பார்த்துள்ளனர். இதில் ரம்பாவுக்கும், அவரது அண்ணனுக்கும் மாரடைப்பு வராத குறையாம்.

படத்தில் ஒன்றுமே இல்லையாம். படத்தை இப்படியே வெளியிட்டால் தலையில் துண்டு தான் என்பதை உணர்ந்துகொண்ட ரம்பாவின் அண்ணன் பழம்பெரும் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான பஞ்சு அருணாச்சலத்திடம்ஓடினார்.

கதையை மாற்றித் தருமாறு கெஞ்ச, இரக்கப்பட்ட பஞ்சு புதிய கதையைத் தந்தாராம். பஞ்சுவின் புதிய கதையுடன்படப்பிடிப்பு துவங்க இருந்த நேரத்தில் ஜோதிகா ரூபத்தில் குழப்பம் வந்தது.

படத்தின் கதையை என்னைக் கேட்காமல் மாற்றியது தவறு, மேலும் இதுவரை என்னிடம் பேசிய சம்பளத்தில் பாதிகூட கைக்கு வரவில்லை. இரண்டையும் சரி செய்தால்தான் நடிப்பேன் என்று கறாராக சொல்லி விட்டாராம் ஜோ.

அதிர்ந்து போன ரம்பா, இதென்ன புதுக் குழப்பம் என்று வெறுத்துப் போயுள்ளாராம். ஜோதிகாவிடம் நேரடியாகஅவர் பேசியுள்ளார். ஆனால் ரம்பாவை அவர் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவர்தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்களும் புகாரை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்களாம்.படத்தின் சண்டைக் காட்சியில் கீழே விழுந்த லைலா பெட் ரெஸ்டில் இருக்கிறார்.

இதனால் "த்ரீ ரோஸஸ்" இப்போது முள் ரோஜா ஆகிக் கொண்டிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil