»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டாலும் கூட 3 ஆண்டுக்கு முன் வந்த நீலாம்பரி கேரக்டர் மூலமே தமிழ் திரையுலகில் பெரும் பெயர் பெற்றார் ரம்யாகிருஷ்ணன்.

பாண்டியனுடன் தனது முதல் படத்தில் ஜோடி சேர்ந்த ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் முதல் சூப்பர் ஆக்டர் கமல் வரை அனைவருனுடம் பல படங்களில் நடித்துள்ளார்.தாய் மொழியான தமிழிலும், தந்தை மொழியான தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், கன்னடம், மலையாளத்திலும்நடித்துள்ளார். இதுதவிர இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

படையப்பாதான் இவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. படையப்பாவிற்குப் பிறகு அவர் பல படங்களில் மளமளவென புக் ஆனார். அதுவரை சின்னச் சின்னரோல்களில் மட்டுமே தமிழில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், சரத்குமார், விஜய்காந்த், கமல் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவுக்குவளர்ந்தார்.

இடையில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். ரகசிய திருமணம் கூட ஆகிவிட்டதாக பேச்சு வந்தது. இதனால்ரவிக்குமார் வீட்டில் பிரச்சனையும் வந்தது. பின்னர் இருவரும் விலகிவிட்டனர்.

திருமண வயதை எப்போதோ கடந்து விட்ட ரம்யா, இன்னும் கூட பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் கல்யாணத்தைப் பற்றி நினைக்கஅவரால் முடியவில்லை. ஆனால் பெற்றவர்களால் அப்படி இருக்க முடியுமோ? எனவே சீக்கிரமே தங்களது மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்துள்ளனர்.

இப்போது மாப்பிள்ளை பார்க்கும் படலம் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவிலேயே டும் டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil