»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிசுகிசு வலையில் லேட்டஸ்டாக ரம்யா கிருஷ்ணா விழுந்திருக்கிறார்.

படையப்பாவில் நீலாம்பரியாக வந்து அசத்திய ரம்யா கிருஷ்ணனுக்கும்,அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஒரு "இது என்றுகோடம்பாக்கத்தில் பேச்சு. இப்போது "அது வளர்ந்து கர்ப்பத்தில் நிற்பதாகலேட்டஸ்ட் செய்தி.

முதல் வசந்தத்தில் கதாநாயகியாக, பாண்டியனுடன் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன்.அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் பிரபலமடையவில்லை. இதையடுத்துதெலுங்குப் பக்கம் தாவினார். அங்கு மார்க்கெட் கிடைக்கவே தற்காலிகமாககோடம்பாக்கத்தை மறந்தார். பிறகு இந்திக்கும் போய் வந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் படையப்பாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.சூப்பர் ஸ்டாரையே மிஞ்சும் அளவுக்கு அபாரமாக நடித்து அனைவரின்பாராட்டையும் பெற்றார்.

இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், ரம்யாவுக்கும் காதல் என்றுஅப்போதே பேச்சு எழுந்தது. ஆனால் எடுபடவில்லை. ஆனால் ரவிக்குமாரின்பாட்டாளியிலும், ரம்யாவே கதாநாயகி என்று வந்தபோது, வதந்திக்கு வலுகூடியது. இப்போது ரம்யா கிருஷ்ணன் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள்வந்துள்ளன.

ரம்யாவைப் பற்றி வதந்திகள் வருவது புதிதல்ல. இதற்கு முன்பு ராகவேந்திர ராவ்,டேவிட் தவன், கிருஷ்ண வம்சி ஆகியோருடன் ரம்யா கிசுகிசுக்கப்பட்டார்.

இப்போது வந்துள்ள கிசுகிசு கொஞ்சம் ஸ்டிராங்காகவே உள்ளது. ரம்யாவுக்காகவெளிநாட்டுக் கார் ஒன்றை ரவிக்குமார் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், அவரதுவீட்டை மாற்றிக் கட்ட உதவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை விடமுக்கியானது, தற்போது கமலை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் தெனாலிபடத்திற்குப் பிறகு ரம்யாவின் வீட்டுக்கே குடிபோக ரவிக்குமார்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ரவிக்குமார், ரம்யா காதல் ஒருவேளை திருமணத்தில் முடிந்தால், ரவிக்குமாரின்மனைவி நிலை என்ன என்பது ரவிக்குமார் முதலில் இயக்கிய புரியாத புதிர்படத்தின் பெயரைப் போலவே உள்ளது.

ஆனால் ஒரே நேரத்தில் இரு கத்திகளைச் சமாளிக்கும் லாவகம் ரவிக்குமாருக்குவந்து விட்டதாகத் தெரிகிறது. ரம்யாவுடன் காதல் ஒரு பக்கம், மறுபக்கத்தில்மனைவி பெயரில் திரைப்படக் கம்பெனி. அதன் கீழ்தான் இப்போது தெனாலியைத்தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீதேவி ஸ்டைலில் ரவிக்குமாரை திருமணம் செய்ய ரம்யா திட்டமிடுகிறாராஎன்பது தெரியவில்லை. அப்படி நடந்தால் ரம்யாவின் இப்போதைய காதலர்கிருஷ்ண வம்சி எங்கே போவார் என்றும் தெரியவில்லை.

காத்திருந்து பார்ப்போம் நீலாம்பரி என்ன செய்யப் போகிறார் என்பதை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil