»   »  கணவரைப் பிரிந்தாரா ரம்யா?

கணவரைப் பிரிந்தாரா ரம்யா?

Subscribe to Oneindia Tamil

ரம்யா கிருஷ்ணன், தனது கணவரும் இயக்குநருமான கிருஷ்ண வம்சியை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் இதை ரம்யா கிருஷ்ணன் மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ரம்யா முக்கியமானவர். வெள்ளை மனசு படத்தில் சாதாரண ஹீரோயினாக அறிமுகமாகி சில காலம் தமிழில் நடித்து வந்த ரம்யாவுக்கு ஆரம்பத்தில் தமிழ் சரியான ஒத்துழைப்பும், அங்கீகாரமும் தரவில்லை.

இதனால் தெலுங்குக்குத் தாவினார். அங்கு கிளாமர் கோதாவில் குதித்து முன்னணி நடிகையானார். இதையடுத்து படையப்பா வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. படையப்பா கொடுத்த பெரிய பிரேக்கால் தமிழில் பிரபலமானார் ரம்யா.

ரம்யாவின் தமிழ் திரையுலக 2வது இன்னிங்ஸ் சிறப்பாகவே இருந்தது. பல படங்களில் மளமளவென்று நடித்த ரம்யா, சிம்புவுடன் குத்துப் பாட்டுக்கு கிளாமர் ஆட்டம் ஆடி பரபரப்பும் ஏற்படுத்தினார்.

வயதை மீறிய ஆட்டம், பாட்டத்தில் இருந்த ரம்யாவுக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தபோது கிருஷ்ண வம்சிக்கு கழுத்தை நீட்டினார் ரம்யா. அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இதையடுத்து டிவி பக்கம் வந்தார் ரம்யா. ராதிகாவின் ராடன் நிறுவனம் நடத்திய தங்கவேட்டை நிகழ்ச்சியைத் தொகுத்தளித்து தமிழ் குடும்பங்களை ஆக்கிரமித்தார்.

கணவர் குழந்தையுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த ரம்யா, தங்க வேட்டைக்காக அவ்வப்போது சென்னைக்கு வந்து சென்றார். இப்போது தங்க வேட்டை நிகழ்ச்சியில் அவர் இல்லை. இதனால் ஹைதராபாத்திலேயே செட்டிலாகியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் சென்னைக்கு குழந்தையுடன் வந்த அவர் தனது பெற்றோருடனேயே தங்கியுள்ளார். இதனால் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, பிரிந்து வந்து விட்டார் என செய்தி கிளம்பியுள்ளது.

ஆனால் இதை ரம்யா மறுத்துள்ளார். சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை. கணவருடன் சந்தோஷமாகத்தான் உள்ளேன். புதிதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெறவுள்ளேன். அதுதொடர்பாகத்தான் சென்னைக்கு வந்துள்ளேன். மற்றபடி எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை, ஓ.கே.வா என்று கூறி அனுப்பி வைத்தார்.

நல்லா இருந்தா சரித்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil