»   »  டைவர்ஸை நோக்கி ரஞ்சிதா

டைவர்ஸை நோக்கி ரஞ்சிதா

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் அடுத்த டைவர்ஸ்சுக்கான முஸ்தீபுகள் நடந்து வருகின்றன.

தமிழ் சினிமா நடிகைகளின் காதல் கல்யாணம் சில மாதங்கள் வரைதான் நீடிப்பது வழக்கமாகி வருகிறது.அப்படியே நீடித்தாலும், சில வருடங்களிலேயே வாழ்க்கை கசந்து அல்லது கருத்து வேறுபாடு முற்றிப் போய்மோதலிலும் பின்னர் டைவர்ஸிலும் முடிந்து விடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கமல்ஹாசன்-சரிகா, பார்த்திபன்-சீதாவில் ஆரம்பித்து சொர்ணமால்யா, சுகன்யா, பாபிலோனா, கெளதமி எனவகையாக பல விவாகரத்துக்கள் நடந்து வருகின்றன.

இப்போது இன்னொரு நடிகை விவகாரத்துக்கு ரெடியாகி வருவதாக ஒரு தகவல் கசிகிறது. அது வேறு யாரும்அல்ல, பாரதிராஜாவின் அறிமுகமான ரஞ்சிதாதான். உற்றார், உறவினர் பெற்றோர் பார்த்து கேரளாவைச் சேர்ந்தஒரு ராணுவ கேப்டனுக்கு ரஞ்சிதாவை திருமணம் செய்து கொடுத்தனர்.

அவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் சமீப காலமாக அவருக்கும், கணவருக்கும் கருத்துவேறுபாடு அதிகமாகி விட்டதாம். இதனால் கணவரிடமிருந்து பிரிந்து சென்னையில் தனி வீடு பார்த்துகுடியேறியுள்ளாராம்.

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் தற்போது ரஞ்சிதா நடித்து வருகிறார். தனது அன்றாடவாழ்க்கைச் செலவுகளுக்காக டிவி தொடர்களில் அதிகமாக நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இதற்காக தீவிரமாகவாய்ப்புகளும் தேடி வருகிறார்.

சினிமாவில் அக்கா, அம்மா கேரக்டரில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று சில மாதங்களுக்கு முன்பு வரை கூறிக்கொண்டிருந்தார் ரஞ்சிதா. இனி அந்த நிலையிலும் மாற்றம் இருக்குமாம்.

விரைவில் கணவருக்கு டைரவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி விடுவார் என்கிறார்கள்.

Read more about: actress, cinema, divorce, ramya, ranjitha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil