»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கீதாவாக இருந்து ரசிகாவாக மாறி பாண்டியராஜன் போன்றவர்களுடன் குப்பை கொட்டிவிட்டு, நல்லவாய்ப்புக்கள் இல்லாததால், சொந்த ஊரான தெலுங்குக்குப் போய் இரண்டாம் மட்ட ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்தவரை தமிழுக்குக் கொண்டு வந்தார் டைரக்டர் பாலா.

மிகுந்த நம்பிக்கையுடன் வந்தவருக்கு பிதாமகனில் கஞ்சா விற்கும் வேடம் கிடைத்தது. நல்ல பெயர் கிடைக்கும்,அத்தோடு சான்ஸ்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒத்துக் கொண்டு நடித்தார்.

நன்றாக நடித்ததாக பெயர் மட்டுமே கிடைத்தது. சான்ஸ்.. ஹூ..ஹூம்.

காத்திருந்து, காத்திருந்து, பி.ஆர்.ஓக்கள் மூலம் முயற்சித்து, முயற்சித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால்வெறுப்பின் உச்ச கட்டத்துக்குப்போன ரசிகா, கடந்த வாரம் மீண்டும் சென்னைக்கு டாடா சொல்லிவிட்டு பெட்டி,படுக்கையோடு ஹைதராபாத்துக்கே கிளம்பிவிட்டார்.

அது என்னவோ தெரியவில்லை... பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்குக் கிடைக்கும் பெயரும்,வாழ்க்கையும் ஹீரோயின்களுக்குக் கிடைக்காமலேயே போய்விடுவது வழக்கமாகிவிட்டது. சேதுவின் மூலம்விக்ரம் மறுவாழ்வு பெற்றார்.

ஆனால், குஜலாம்பாளாக நடித்த அபிதா காணாமல் போனார்.

அதே போல லைலாவுக்கு நந்தாவில் நல்ல பெயர் கிடைத்தது.

ஆனால், தொடர்ந்து சான்ஸ்கள் வராததால்மும்பைக்கே போய்விட்டவரை பிதாமகனுக்காகத் திரும்பி அழைத்து வந்தார்.

இப்போது சரத்குமாருடன் கம்பீரம்படத்தில் நடிக்கிறார். மேற்கொண்டு என்ன ஆகுமோ தெரியவில்லை.

அதேபோல சேதுவிலும், நந்தாவிலும் முக்கிய கேரக்டரில் நடித்த ராஜ்ஸ்ரீ, அத்தோடு சினிமாவுக்கே முழுக்குபோட்டுவிட்டு டிவிக்குப் போக நேரிட்டதும் தெரிந்த கதை தான்.

இந் நிலையில் முதல் ரவுண்டிலும் தோற்று, இப்போது இரண்டாவது ரவுண்டிலும் நிலைக்க முடியாமல் ஊருக்குக்கிளம்பியிருக்கிறார் ரசிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil