»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கீர்த்தி ரெட்டி ஞாபம் இருக்கா... தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும்கலக்கியவர். நடிப்பும், டிரஸ்சும் இவரிடம் கொஞ்சமே கொஞ்சமாய் இருக்கும.

ஆனாலும், திறமையால் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்தவர். இப்போது இவர் ஆள்மாயமாய்விட்டார். விசாரித்தால், மும்பையில் வர்த்தக பிரமுகரை கல்யாணம் செய்து கொண்டுசெட்டில் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.

கொஞ்ச நாளாய் திடீரென காணாமல் போயிருக்கும் இன்னொரு பிரபலம் ரவளி. ஹீரோயினாகவந்து கவர்ச்சிக்குத் தன்னை தானே திருப்பிவிட்டுக் கொண்டவர்.

தெலுங்கிலும், தமிழிலும் நன்றாகவே சம்பாதித்து, சொந்த சென்னை, ஹைதராபாத்தில்ரீ-ரெக்கார்டிங் தியேட்டர், வணிக வளாகங்கள், பங்களாக்கள் என வளர்ந்தவர். சமீப காலமாய்படங்கள் இல்லை. மலையாளத்திலும் முயன்று பார்த்துவிட்டு ஒதுங்கிய ரவளி இப்போது மாயம்.

பாய் பிரண்டை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்கிறார்கள். இருந்தாலும்வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ரவளி தயார் தான், சான்ஸை கொடுங்கள், ஆள் தானே வந்து நிற்பார்என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்

இதே போல கருத்தம்மாவில் நடித்த மகேஸ்வரிக்கு அடுத்தடுத்து கை கொடுத்த இந்தி திரையுலகம்இப்போது கைவிட்டுவிட்டது. இதனால் அவருக்கும் விரைவில் டும்.. டும்மாம். மாப்பிள்ளை தேடும்படலம் நடந்து கொண்டிருக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil