உண்மை அம்பலமானதால்...ஷுட்டிங் பிளானை மாற்றிய அந்த விவகார டைரக்டர்
சென்னை : கிணறு வெட்ட போய் பூதம் கிளப்பிய கதையாக விவகாரத்து விஷயம் வெளியே வர போய், தன்னை பற்றிய பல ரகசியங்கள் அம்பலமாகி வருவதால் ஆடிப் போய் உள்ளார் அந்த விவகாரமான டைரக்டர்.
விவகாரத்து ஆன விஷயம் வெளியே வந்தால் அது தனக்கு செலவில்லாத விளம்பரமாக இருக்கும் என நினைத்தாரோ என்னவோ, அந்த விவகார டைரக்டர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தனது அடுத்த படத்திற்கு அது நல்ல விளம்பரம் என்று யோசித்து, மீடியாக்களில் வந்த எந்த தகவலுக்கு ரியாக்ட் செய்யவில்லை.

அம்பலமாகும் ரகசியங்கள்
ஆனால் விவாகரத்து மட்டுமல்ல, அதோடு சேர்ந்து விவகார டைரக்டர் பற்றிய பல விஷயங்கள் வெளியே வர துவங்கி விட்டது. தான் எடுக்கும் புதிய படத்திற்கு அந்த கடலோர ஊரை தான் லொகேஷனாக முடிவு செய்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டாராம். சமீப காலமாக எல்லா முக்கிய டைரக்டர்களும் அந்த ஊரில் தான் ஷுட்டிங்கை நடத்துகிறார்கள். அதனால் நானும் நடத்துகிறேன் என அனைவரிடமும் சொல்லி வந்தாராம்.

இது தான் காரணம்
ஆனால் சமீபத்தில் அந்த டைரக்டருக்கு மிக நெருக்கமான நண்பர் அந்த கடலோர ஊரில் தான் இருப்பதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. அது ஆண் நண்பரா, பெண் நண்பரா என்ற குழப்பம் வேறு போய் கொண்டிருக்கிறது. கிசுகிசுக்கள் அதிகம் வர துவங்கியதால், இனியும் இங்கு ஷுட்டிங்கை நடத்தினால் நம்ம மானமே போய் விடும். அப்புறம் முதலுக்கே மோசம் வந்தது போல், இருக்க ஒரு படமும் கை நழுவி போய் விடும் என பயந்து போய் விட்டாராம்.

புது லொகேஷனில் ஷுட்டிங்
அதனால் சத்தமே இல்லாமல் லொகேஷனை மற்றொரு கடற்கரை ஊருக்கு மாற்றி விட்டாராம். அதிலும் ஒரு உள்குத்து காரணம் உள்ளதாம். அந்த விவகார டைரக்டரின் படம் என்றாலே சில விவகாரமான ஏரியாக்களும், சீன்களும் நிச்சயம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த புது படத்திலும் அப்படிப்பட்ட சீன்கள் தூக்கலாக இருக்க போகிறதாம். அதற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட கடலோர ஊர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் சரியாக இருக்குமாம்.

இப்படி ஒரு மேட்டர் இருக்கா
விவகாரமான சீன்கள் இல்லாமல் தன்னால் படம் எடுக்க முடியாது என விவகார டைரக்டர் பிடிவாதமாக இருப்பதால், அந்த பிரபலமான தயாரிப்பாளரும் தனது பிளானை மாற்றி விட்டாராம். அதுவும் இல்லாமல் இந்த மாதிரி விவகாரமான சீன்களை இப்போதெல்லாம் யாரும் விரும்புவதில்லை என தயாரிப்பாளர் பலமுறை சொல்லியும் விவகார டைரக்டர் கேட்காததால், அவரும் அமைதியாகி கராராக ஷுட்டிங் பிளான் போட்டுக் கொடுத்து விட்டாராம்.

இப்படி ஆகிட்டாரே இவர்
முன்பேல்லாம் தான் வைத்தது தான் சட்டம் என்பது போல் பேசும் அந்த விவகார டைரக்டர் இப்போதெல்லாம் ரொம்ப அமைதி காக்கிறாராம். தற்போது தனது நிலைமை தலைகீழாக மாறி விட்டதால், தயாரிப்பாளர் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டி வருகிறாராம். எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என அவரை பார்க்கும் பலரும் பரிதாபப்பட்டு பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











