காசு மட்டும் தான் குறிக்கோள்.. ஒரே வருஷத்துல கோடீஸ்வரி ஆகணும்.. முதல்ல இருந்தே இப்படியா?
சென்னை: ரிட்டயரான ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு என தெரிந்தும் அவரிடம் ஏகப்பட்ட பணம் புரள்வதால் தான் அம்மணி அவரை தேடி வந்து ஒட்டிக்கொண்டு ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு பணத்தின் மீது மட்டும் தான் குறி என்றும் திடுக்கிட வைக்கும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தாலும் சில பெண்கள் திருமணமான ஆண்களை வட்டமிட காரணம் காதல் கத்தரிக்காய் எல்லாம் ஒன்றுமில்லை என்றும் முழுக்க முழுக்க காசு பணம் துட்டு மணி மணி தான் என்று கூறுகின்றனர்.

சில பிரபல நடிகைகளே விவாகரத்து செய்ய முக்கிய காரணமே பல கோடி ரூபாய் பணத்தை பிடுங்கி விட்டு புதிய வாழ்க்கையை தொடங்கி ஜாலியாக ஜல்சா பண்ணலாம் என்பதற்காகத்தான் என்றும் கோலிவுட்டில் பரபரப்பான பேச்சுகள் அடிபட்டு வருகிறது.
ஆண்களின் சபலம்: கிளி போல மனைவி இருந்தாலும் குரங்கு போல இன்னொரு பெண்ணை தேடி ஓடும் ஆண்களின் சபலத்துக்கு அவர்கள் பல கோடி ரூபாய் ஃபைன் கட்டினாலும் தவறே இல்லை என்றும் அடிபட்டவர்களும் அனுபவஸ்த்தர்களும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி சபலத்தால் மாட்டிக்கிட்டவர் தான் அந்த ரிட்டயர்ட் நடிகர் என்கின்றனர்.
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்: புதிதாக இன்னொரு பெண் மீது காம இச்சை ஏற்பட்ட நிலையில், பகிரங்கமாக அனைவரும் அறியும் வகையில் திருமணம் எல்லாம் செய்துக் கொள்ளாமல் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து உல்லாசத்தை அனுபவித்து வந்த நடிகருக்கு முதல் மனைவி வைத்த செக்மேட் கந்தர்வக்கோட்டையை அதிர வைத்து விட்டதாம். அதனால், தான் அவர் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என நிலையான முடிவெடுக்கவே ரொம்ப நாள் எடுத்துக் கொண்டார் என்றும் நடிகரின் நிலைமையை முதல் மனைவி புரிந்துக் கொண்ட நிலையில், அவரை காப்பாற்ற முடிவெடுக்கவே அவருக்கு தற்போது பயம் போய்விட்டது என்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே காசு தான் குறி: ஒரே வருஷத்துல நடிகரின் பணத்தை லம்பா பிடுங்கி கோடீஸ்வரியாகி செட்டிலாகி விட வேண்டும் என்பது தான் அந்த செகண்ட் சேனலின் குறிக்கோள் என்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே அந்த நபர் திருமணமானவர் என்பது தெரிந்தும் அவருடன் சுற்ற காரணமே பல கோடிகளுக்கு அதிபதி என்பதால் தான் என்றும் வசதியாக வாழ நினைத்து அது முடியாமல் போகவே இத்தனை பஞ்சாயத்துகள் என்கின்றனர்.
துரோகம் செய்தால்: இன்னொரு பக்கம், பல கோடி வைத்திருப்பவர் பண்ண பாவத்துக்கு கேட்கும் தொகையை கொடுத்துத்தான் தீர வேண்டும் என்றும் தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் நினைத்தால் கண்டிப்பாக வாழ்க்கை கடைசி வரை சுத்தி அடிக்கும் கர்மா இஸ் பூமரங் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











