»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

மண்வாசனையில் அறிமுகமாகி அருமையான பல கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடம் பிடித்த நடிகை ரேவதி.

ஆஷா கேளுண்ணி என்ற இயற் பெயர் கொண்ட இந்த மலையாளத்து மங்கையின் திரை வாழ்க்கையில் நிறைவு ஏற்பட்டிருந்தாலும் கூட தனிப்பட்டவாழ்க்கையில் ஏகப்பட்ட போராட்டங்கள்.

இத்தனை நாட்களாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த செய்தியும் வெளியாகாமல் இருந்து வந்தது. ஆனால் இப்போது ஒவ்வொன்றாக கசியத்தொடங்கியுள்ளது.

புன்னகை மன்னன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தருணம் அது. ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து விட்டு எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் தனக்கு திருமணம்முடிவாகி விட்டதை அறிவித்தார்.

ஆனால் திடீர் திருமணம் என்பதால் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த யாருமே ரேவதியின் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரை தமிழ் திரையுலகிற்குஅறிமுகம் செய்த பாரதிராஜாவுக்குக் கூட அழைப்பு போகவில்லை.

கேமராமேன் சுரேஷ் மேனனைக் கல்யாணம் செய்து கொண்டார் ரேவதி.

எப்போதும் மிக கலகலப்பாக இருக்கும் ரேவதிக்கும், உம்மனா மூஞ்சியாக இருக்கும் சுரேஷ் மேனனுக்கும் பொருத்தமே இல்லை என்று பத்திரிகைகள்அப்போது எழுதின. கல்யாணத்திற்குப் பிறகு டைரக்ஷனில் இறங்கினார் சுரேஷ் மேனன்.

அவருக்கு நடிக்கவும் வாய்ப்பளித்தார் ரேவதி. ஆனாலும் தமிழ் சினிமா சுரேஷ் மேனனை வரவேற்கவில்லை. டிவி சீரியல் கூட இயக்கிப் பார்த்தும்புண்ணியமில்லை. இதையடுத்து ரேவதியை நடிக்க விட்டு விட்டு சுரேஷ் மேனன் ஒதுங்கிக் கொண்டார்.

இந் நிலையில் ரேவதி குறித்து பல வதந்திகள் கிளம்பின. அவருக்கும் நடிகர் கார்த்திக்கிற்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் சுரேஷ்மேனனுக்கும், ரேவதிக்கும் இடையே பூசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் அது பெரிதாகவில்லை. ரேவதியும் பெரிதுபடுத்தவில்லை. பின்னர் தேர்தலில் நின்றார் ரேவதி. அரசியல் கை கொடுக்கவில்லை.

இந் நிலையில் ரேவதிக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்ததாலும் மேனனும் வாய்ப்பில்லாமல் இருந்ததாலும் பொருளாதாரரீதியில் ரேவதிக்கு நெருக்கடிஆரம்பித்தது.

ஆனால், சமூக சேவை நிறுவனமான பேன்யனில் சேர்ந்து சமூக சேவையிலும் இறங்கினார். ஒரிவழியாக பொருளாதாரராதியில் தன்னை சமாளித்துக்கொண்ட ரேவதி சமீபத்தில் மித்ர் என்ற படத்தை எடுத்தார்.

சமீப காலமாக ரேவதியின் குடும்ப வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் தனது கணவரை விவாகரத்து செய்யக்கூடும் என்றும் செய்திகள் அடிபடுகின்றன.

ரேவதி-சுரேஷ் மேனன் பிரச்சனைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் மிக முக்கியமான இரு பிரச்சனைகளில் ஒன்று தமிழ்த் திரையுலகில் தனக்குநல்ல இடம் கிடைக்க ரேவதி சரிவர உதவவில்லை என்று சுரேஷ் மேனனுக்கு மன வருத்தமாம். இரண்டாவது குழந்தை இல்லாத குறை. இப்படிப் பலகாரணங்களைக் கூறுகிறார்கள். இதில் எது உண்மை என்று ரேவதி, சுரேஷ் மேனனுக்கே வெளிச்சம்.

டெய்ல் பீஸ்: ரேவதியின் நெருங்கிய தோழியான நடிகை ரோகிணியின் வீட்டிலும் கொஞ்சம் குழப்பம். கொஞ்ச காலம் திருந்தி வாழ்ந்த கணவர் ரகுவரன் மீண்டும்பழைய பழக்கங்களை அடிக்கடி தொட்டுப் பார்ப்பதால் பெரும் வருத்தத்தில் இருக்கிறார் ரோகிணி.

Read more about: actress, cinema, film, kerala, news, revathy, sex, songs, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil