»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதிய காதலர் தன்னுடைய காதலை முறித்து விட்டதையடுத்து, ரோஜா மறுபடியும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணியுடன் பல ஆண்டுகளாக லவ்விக் கொண்டிருந்த ரோஜா, திடீரென்றுசெல்வமணியை டபாய்த்து விட்டு எனக்கும் அவருக்கும் இடையே இருந்த காதல் முடி(றி)ந்து விட்டது என்றுஅதிரடி அறிக்கை விட்டார்.

ரோஜாவிடம் ஏன் இந்த மாற்றம் என்று கோடம்பாக்கத்துக்காரர்கள் அனைவரும் குடுமியைப் பிய்த்துக்கொண்டிருந்தபோதுதான் ரோஜாவுக்கும், ஆந்திரத் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே காதல் என்ற செய்திகசிந்தது.

ஆனால் இப்போது இந்தக் காதலும் முறிந்து விட்டதாம். முறித்தவர் அந்தப் புதிய காதலர்தானாம். தீவிரமாககாதலித்து வந்த இருவரும் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தார்களாம்.

ஆனால் திடீரென்று, ரோஜா மீது ஏகப்பட்ட வழக்கு உள்ளது என்றும் திருமணத்திற்குப் பிறகும் தினசரிகோர்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தால் குடும்ப கெளரவம் என்ன ஆவது என்றும் காதலர் வீட்டில் மாப்பிள்ளைக்குஅட்வைஸ் கூறப்பட்டதாம்.

இந்த அட்வைஸை அமைதியாகக் கேட்ட மாப்பிள்ளை, அதே அமைதியுடன் ரோஜா வேண்டாம் என்ற முடிவுக்குவந்து விட்டாராம்.

ரோஜாவைத் தன்னுடைய அலுவலகத்திற்கு கூப்பிட்டனுப்பிய காதலர், தனது குடும்பத்தினரின் முடிவை பக்குவமாகஎடுத்துக் கூறியுள்ளார். ஷாக் ஆகிப் போன ரோஜா, இனிமேலும் நான் உயிர் வாழ்வதா என்ற ரேஞ்சுக்குஅழுதுள்ளார்.

பயந்து போன காதலர், ரொம்ப நேரம் தாஜா செய்து ரோஜாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம். நல்ல தொகைஒன்று காதலுக்குப் பரிகாரமாக காதலர் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேள்வி.

சட்டி சுட்டதடா, கை விட்டதடா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil