»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

ரோஸ் நடிகைக்கு புதுக் காதலர் கிடைத்து விட்டாராம். அதனால்தான் ரொம்ப நாளாக காதலித்து வந்த மணியான காதலரை கழற்றி விட்டுவிட்டாராம்.

மணியான டைரக்டரும், ரோஸும் எத்தனை டீப்பாக லவ் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்பது அவர்களை விட அகில உலகத்திற்கும் நன்றாக தெரியும். இந்நிலையில் திடீரென மணியான காதலரை ரோஸ் கழற்றி விட்டது திரையுலகையே கலக்கியுள்ளது. ரோஸ் ஏன் இப்படி மாறினார் என்று அனைவரும்மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

இந் நிலையில் ரோஸ் கலர் மாறியதற்குரிய காரணமாக கோடம்பாக்கத்தில் உலவி வரும் கிசு கிசு இதுதான்:

மணியான காதலர் மீண்டும் ஏதாவது நல்ல படம் கொடுத்து எழுந்து சொந்தக் காலில் நிற்பார் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரோஸ் வெறுத்துப்போய் விட்டார். அடிக்கடி பணம் தான் கேட்கிறாரே தவிர உருப்படியாக ஒரு படத்தை தயாரித்து, இயக்கும் வழியைக் காணாததால் நொந்து போய்விட்டாராம்.

மறுபக்கம் கடன்காரர்கள் வேறு அரிக்கத் தொடங்கியுள்ளனர். கோர்ட், கேஸ், அபராதம் என அலைந்து அலைந்து ஓய்ந்து போய் விட்டார். டிவிசீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்த போதிலும் அதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தில் பாதியை ஒரு பைனான்ஷியர், அவருடைய பாக்கித்தொகைக்காக கேட்டு வாங்கிக் கொண்டு விட்டாராம்.

இதனால் நிம்மதியிழந்து போன நிலையில் இருந்த ரோஸுக்கு ஒரு பிரபலத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. பணப் பசையுள்ள அவர், ரோஸிடம் ஆறுதலாகபேசி, பிரச்சினைகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். பழகப் பழக அவரிடம் மனதைப் பறிகொடுத்தார் ரோஸ்.

இது மணி காதுக்கு வந்துள்ளது. அதிர்ந்து போன அவர், ரோஸிடம் சண்டை போட்டுள்ளார். உங்களை நம்பி இருந்ததற்கு, கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாகஅலைந்ததுதான் மிச்சம் என்று பதிலுக்கு சாடியுள்ளார் ரோஸ். சண்டை முற்றவே இனிமேல் நண்பர்களாகவே இருப்போம் என்று கைகுலுக்கி, மணிக்கு பெரியகும்பிடு போட்டு அனுப்பி விட்டாராம் ரோஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil