»   »  பிஸ்லரியில் குளிக்கும் சதா

பிஸ்லரியில் குளிக்கும் சதா

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் இப்போதைய லேடி பந்தா பரமசிவம் நடிகை சதாதான்.

சதாவின் ஆரம்பகால பந்தாக்களை நாம் ஏற்கனவே கோடு காட்டியிருந்தோம். இப்போது அவர் உச்சி மரத்திலேயே ஏறிவிட்டார்.

மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்க மாட்டேன் என்று அடம் பிடித்து, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தான் தங்கி வருகிறார்.

இப்போது மேலும் ஒரு கெடிபிடி செய்கிறாராம். சென்னை கார்ப்பரேஷன் வாட்டர் என் மேனிக்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்என்கிறது.

எனவே மினரல் வாட்டரில் தான் குளிப்பேன் என்கிறாராம். நட்சத்திர அறைக்கு வாடகை கொடுக்கும் தயாரிப்பாளர்கள்தலையில்தான் மினரல் வாட்டர் பில்லும் விழுகிறது.

ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று இவர் அடிக்கும் கூத்தையெல்லாம் பொறுத்துக் கொள்வது,படப்பிடிப்பின்போது அட்ஜெஸ்ட் செய்து கொள்வார் என்பதற்குத்தான்.

ஆனால் அங்கும் அநியாயத்துக்கு சதாய்க்கிறார் சதா.

இப்படி ஆட மாட்டேன், அந்த டிரஸ் போட மாட்டேன் என்று டபாய்த்த வந்த சதா, எதிரி படத்திற்குப் பின் புதிதாக ஒருகண்டிஷன் போடுகிறார்.

எனது வேடத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும், நான் நடிக்கும் படத்தில் செகண்ட் ஹீரோயினே கூடாதுஎன்கிறாராம்.

இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க மாட்டேன் என்று இவர் கூறுவதற்குக் காரணம், எதிரி படத்தில் இவருடன் கனிகாவும்நடித்திருந்தார்.

கதாநாயகி சதாதான் என்றாலும், பெரும்பாலான இடங்களில் கனிகா இவரை ஓவர்டேக் செய்திருந்தார். படம்ரிலீஸான போது சதாவை விட கனிகாவுக்குத்தான் நல்ல பெயர் கிடைத்தது. அதிலிருந்துதான் சதா உஷாராகி விட்டார்.

இத்தனை கன்டிசன் போட்டாலும் நம் கோலிவுட் ஆட்களுக்கு சதாவிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு. இதனால் தங்களுக்கு குடிக்க தண்ணிகிடைக்கிறதோ இல்லையோ, சதாவுக்கு குளிக்க மினரல் வாட்டர் வாங்கித் தந்துவிட்டு, அவர் போடும் கன்டிசன்களுக்கும்வேகமாகவே தலையாட்டிவிடுகிறார்கள்.

இப்போது விக்ரமுடன் அந்நியன் படத்தில் நடித்து வரும் சதாவின் கைகளில் படங்களுக்கு குறைவே இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil