»   »  சைலண்டாக வேலையைத் தொடங்கிய சண்டக்கோழி!

சைலண்டாக வேலையைத் தொடங்கிய சண்டக்கோழி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டக்கோழி நடிகர் திடீரென தயாரிப்பாளர் சங்கத்தை நேரடியாக தாக்கி பேச ஆரம்பித்தார். அதற்காக மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கமும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்ததும் நமக்கு தெரியும்.

முதலில் அதிகாரபூர்வ நோட்டீஸ் வரட்டும் என்று தெனாவட்டாக சொல்லி வந்தவருக்கு நேற்று சங்கம் சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டது. அவரோடு இன்னும் மூன்று தயாரிப்பாளர்களுக்கும் சேர்த்தே அனுப்பப்பட்டுள்ளது.

Sandakozhi hero starts work silently

ஆனால் நடிகர் இறங்கி வருவதாக தெரியவில்லை. நடிகர் இத்தனை துணிச்சலாக இருக்க காரணம் பின்னணியில் இருப்பவர்கள் தானாம்.

நடிகர் தான் பேசுவதற்கு முன்பே அவார்டு தயாரிப்பாளர், பச்சை தயாரிப்பாளர் உள்ளிட்ட தலைவருக்கு எதிரான தயாரிப்பாளர்களிடம் ரகசிய கூட்டம் போட்டு ஆதரவு திரட்டிய பின்னர் தான் பேசவே தொடங்கியிருக்கிறார்.

அந்த வகையில் சண்டக்கோழி இப்போதே தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை சத்தமே இல்லாமல் தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.

English summary
Sources say that the hero of Sandakozhi has started his work against producers council silently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil