»   »  முழு விபரம்

முழு விபரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"காதல் சந்தியாவின் அம்மாவுக்கு இப்போது புதிய பிரமோஷன் கிடைத்துள்ளது.

"காதல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு மாற்றத்தை சந்தியா ஏற்படுத்தினார் என்றால் அது மிகையில்லை. மிகவும்எதார்த்தமான நடிப்பால் அவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும்.

தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை அப்படியே மலையாளத்திற்கு கொத்திக் கொண்டு போவதை ஒரு வழக்கமாகவேஅங்கு வைத்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் சம்பளம் குறைவாகவே இருந்த போதிலும் என்ன காரணத்தினாலோ, இங்கு பீக்கில் இருந்தாலும் கூடபெரும்பாலான நடிகைகள் மலையாளத்தில் சிறிது கையை நனைத்து விட்டு இங்கு வந்து விடுகிறார்கள்.

இந்த விஷயத்தில் பலரை உதாரணமாக சொல்லலாம். குஷ்பு, சினேகா, கெளசல்யா, மீனா, ஐஸ்வர்யா, நக்மா, ரேவதி, சுகாசினி,ரம்பா, ஷர்மிளி என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த வரிசையில் இப்போது காதல் சந்தியாவும் சேர்ந்து விட்டார். அவர், மலையாளத்தின் பிரபல டைரக்டரான சிபி மலையிலின்"ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் இவருக்கு மிக அருமையான கேரக்டராம். இந்தப் படம் வெளிவந்தால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது போல மலையாள ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விடுவேன் என்று உறுதியாக கூறுகிறார் சந்தியா.

இப்போதெல்லாம் எந்த படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும் சந்தியா, தன்னுடன் அம்மாவையும் அழைத்துச் செல்கிறாராம். எதற்குதெரியுமா? ஹோட்டல் அறையில் எங்காவது ரகசிய கேமராவை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வது தான்இவரது வேலை.

ஹோட்டலில் ரூம் போட்ட உடன் முதலிலில் உள்ளே செல்வது சந்தியாவின் அம்மா தான். அவர் துப்பறியும் நிபுணர் போல இன்ச்பை இன்சாக ஒவ்வொரு ரூமாக துருவி விடுவாராம். குறிப்பாக பாத்ரூமை சல்லடை போட்டு சோதனை செய்வாராம்.

த்ரிஷாவுக்கு வந்த நிலைமை தனது மகளுக்கு வந்து விடக்கூடாதே என்பதில் இவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம்.

சமீபத்தில் "ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் மலையாளப் படத்திற்காக ஊட்டிக்கு சென்ற போதும் இதே கதை தான். சந்தியாவின்அம்மா, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் சுமார் 2 மணி நேரம் அதிரடி சோதனை நடத்திய பிறகே தனது மகளைஉள்ளே அனுமதித்தாராம்.

இது குறித்து சந்தியா கூறிய போது, த்ரிஷா விவகாரத்திற்குப் பிறகு இப்போது எல்லா ஹோட்டல்களையும் சந்தேகப்படவேண்டியுள்ளது. ஊட்டியில் ஒரு மலையாளப் படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்தேன்.

அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலை எனது அம்மா துருவி துருவி பார்த்தார். குளியல் அறை,கதவு, குழாய், படுக்கை அறை, கட்டில், மேஜை, நாற்காலி, மின் விசிறி, பீரோ என அத்தனையையும் ஒன்று விடாமல் துருவித்துருவி சோதான போட்டார்.

எத்தனை முறை வெளியே போய் விட்டு வந்தாலும் எனது அம்மாவுக்கு அறையில் நுழைந்ததும் முதல் வேலை அந்த அறையைசோதனை போடுவது தான். என்ன செய்வது இந்த விஷயத்தில் ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதிருக்கிறதேஎன்று அங்கலாய்க்கிறார் இவர்.

செல்போனிலும் இப்போது கேமரா வந்து விட்டது அம்மாவுக்கு தெரியாதோ, என்னவோ !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil