»   »  சங்கவி, விந்தியா பசை நட்பு

சங்கவி, விந்தியா பசை நட்பு

Subscribe to Oneindia Tamil

சங்கவி, விந்தியா நட்பு நாளுக்கு நாள் பல்கிப் பெருகி பசை போல படு பிடிப்பாக மாறி வருகிறதாம்.

தமிழ் உள்பட தென்னிந்திய படங்கள் எதிலும் காணாமல் போய் விட்ட முன்னாள் கனவுக் கன்னிகள் சங்கவியும், விந்தியாவும்.

ஆரம்பத்தில் படு அமர்க்களாக கல்லாக் கட்டி வந்த இருவரும், பின்னர் படையெடுத்த கேரள வரவுகளின் அலையடிப்பில் சிக்கி ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.

இடையில் விந்தியா குத்துப் பாட்டை டிரை செய்து பார்த்தார். சங்கவியும் நூல் விட்டுப் பார்த்தார். இருந்தாலும் இருவரையும் சீண்டுவார் யாரும் இல்லாமல் போனது. இதனால் ரிட்டயர்ட் ஹர்ட் என்று இருவரும் வீட்டோடு முடங்கி விட்டனர்.

வீட்டில் சும்மா கிடந்தால் வீணாகி விடுவோம் என்று பயந்து, பட விழாக்களுக்கு கலக்கலான கிளாமர் டிரஸ்ஸில் வந்து போகத் தொடங்கினர். அப்படி வந்த இடத்தில்தான் இருவருக்கும் நட்பாகிப் போனது.

இருவரும் ஒரே கப்பலில் பயணம் செய்வதால், ஈசியாக நட்பு ஏற்பட்டு பின்னர் அது இறுக்கமானது. இருவரும் சேர்ந்து படம் தயாரிக்கப் போவதாகவும் (அதற்கு அதிமுக பெரும் புள்ளி ஒருவர் பணம் கொடுத்த உதவப் போவதாகவும்) பேச்சு கிளம்பியது. ஆனால் அதுகுறித்து மேல் நடவடிக்கை எதுவும் இல்லை.

தயாரிப்பு வேலைகள் சரிப்பட்டு வராவிட்டாலும் கூட இருவரின் நட்புக்கு எந்த பங்கமும் இல்லை. நாளுக்கு நாள் இறுகியதே தவிர அதில் இளக்கத்தைக் காண முடியவில்லை.

இப்போது நட்பு படு நெருக்கமாகி விட்டதாம். எப்படி என்றால், காலையில் சங்கவி வீட்டில் விந்தியா சாப்பிட்டால், இரவு விந்தியா வீட்டில் சங்கவிக்கு விருந்து வைக்கிறாராம்.

எங்கு போனாலும் சேர்ந்தே போகிறார்கள், அதுவும் ஒரே காரில்

Please Wait while comments are loading...