»   »  டூ.. மச்சாய் கலக்கும் சங்கவி

டூ.. மச்சாய் கலக்கும் சங்கவி

Subscribe to Oneindia Tamil

திருமலை, சுள்ளான் படங்களை இயக்கிய டைரக்டர் ரமணாவுக்கும் சங்கவிக்கும் காதல் பற்றிக் கொண்டுவிட்டதாம்.

நீண்ட கால வன வாசத்துக்கு பின் பஞ்ச தந்திரம் மற்றும் பாபா படங்களின் மூலம் மீண்டும் வந்த சங்கவிக்கு தமிழ் சினிமாகைகொடுக்கவில்லை.

இதையடுத்து தெலுங்கில் புகுந்து பார்த்தார். அங்கு சிங்கிள் டான்ஸ் வாய்ப்புக்கள் கைகொடுத்தன. பல படங்களில் காமக்களியாட்டம் போட்டார் சங்கவி.

ஹீரோயினாக நடிக்க இனி வாய்ப்பே இல்லை என்பதால் தமிழிலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முன் வந்து பலநடிகர்களையும் இயக்குனர்களையும் தனியே சந்தித்தார்.

இதையடுத்து தனது ஏழுமலை படத்தில் சான்ஸ் தருவதாகக் கூறி, சில நாட்கள் சங்கவியிடம் கடலை போட்டுவிட்டு கழற்றிவிட்டுவிட்டார் அர்ஜூன். சங்கவியைத் தூக்கிவிட்டு சிம்ரனை புக் செய்தார்.

இந் நிலையில் தான் சுள்ளான் படத்தில் தனுசுடன் ஆட்டம் போட வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்தபோதே சங்கவியும் படத்தின்இயக்குனர் ரமணாவும் கொஞ்சம் நெருக்கமாகவே பழகிக் கொண்டதாக சொல்லப்பட்டது.

சுள்ளானைத் தொடர்ந்து சத்யராஜுடன் அய்யர் ஐபிஎஸ் படத்தில் டூ..ஊஊஊ மச் கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்சங்கவி. நீண்ட காலமாக சிங்கிள் டான்சுக்கு ஆடி, யாருக்கும் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லாமல் போனதால், இதில்சத்யராஜுக்கு ஜோடி என்றதும் முடிந்தவரை கிளாமராக நடித்து வருகிறார் சங்கவி.

சங்கவியின் ஒத்துழைப்பால் சத்யராஜ் புளகாங்கிதம் அடைந்திருப்பதாகக் கேள்வி.

இதற்கிடையே சுள்ளான் படம் வெளியாகி தனுசுக்கு தொடர்ச்சியான மூன்றாவது தோல்விப் படமாக அது அமைந்துவிட்டது.இதனால் அதை இயக்கிய ரமணா மனம் துவளவே அவருக்கு ஆறுதல் சொன்னதோடு அவருடன் ரொம்பவேநெருங்கிவிட்டாராம் சங்கவி.

இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுவிட்டதாம். ஆனால், தங்களது சினிமா எதிர்காலத்தை மனதில் வைத்து இருவருமே அதைகமுக்கமாகவே வைத்துள்ளனர் என்கிறார்கள்.

இப்போது அய்யர் ஐபிஎஸ்ஸோடு தெலுங்கில் ராம் என்ற ஒரு ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஜோடியாக இரண்டாம் மட்ட ஹீரோயினாகநடிக்கவும் சங்கவிக்கு சான்ஸ் வந்துள்ளது. இனிமேல் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க சான்ஸ் கிடைக்கப் போவதில்லைஎன்பது உறுதியாகிவிட்டதால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சங்கவி.

சங்கவி சென்னையில் இருந்தாலும் ஹைதாராபாத்தில் இருந்தாலும் அவரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாராம் அவரதுகாதலர்.

இது காதல் எல்லாம் இல்லை, வெறும் நட்பு தான் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள். இந்த நட்புக்கு வானமேஎல்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil