»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை விஜயசாந்தி தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தியால் ஹைதராபாத்திலும் கோடம்பாக்கத்திலும்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் "இளஞ்ஜோடிகள்" படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் காலூன்றி அங்கு லேடி சூப்பர் ஸ்டாராகவேஆகி விட்டவர் விஜயசாந்தி.

சில ஆண்டுகளுக்கு முன் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்த விஜயசாந்தி அரசியலில் சேர்ந்த காலத்திலிருந்து தமிழகமுதல்வர் ஜெயலலிதாவைத் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்தன.இது தொடர்பாக சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருடையமானேஜர் கூறியதாவது:

விஜயசாந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்திகளில்சிறிதும் உண்மை இல்லை.

அரசியல் காரணமாக இப்படியொரு வதந்தியை பா.ஜ.கவினர் தான் பரப்பியிருப்பார்கள் என்று தெரிகிறது.

திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளும் திறமைவாய்ந்தவர் விஜயசாந்தி. அவர் ஏன் தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும்?

சினிமாவிலும் அரசியலிரும் விஜயசாந்தியின் வளர்ச்சியை விரும்பாத சிலர் இதுபோன்ற வதந்திகளைக்கிளப்பியிருக்கலாம்.

விரைவில் விஜயசாந்தி நடித்து வெளிவரவிருக்கும் "சாம்பவி" பட டப்பிங் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.இப்போது கூட அவர் அதற்காகத் தான் பிரசாத் ஸ்டூடியோ வரை சென்றுள்ளார்.

விஜயசாந்தியின் தற்கொலை முயற்சி பற்றிய செய்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றார் அவருடையமானேஜர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil