»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

பழநி:

திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் இணைந்து பழநி கோவலில்வழிபட்டனர்.

சரத்குமாரும், ராதிகாவும் காதலித்ததாகவும், திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சரத்குமாரும்,ராதிகாவும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலம் திண்டுக்கல்வந்து அங்கிருந்து வெளிநாட்டு கார் மூலம் பழநி வந்தடைந்தனர். அவர்களுடன் அவர்கள் நண்பர்களும்வந்திருந்தனர்.

சரத்குமாரும், ராதிகாவும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விஞ்ச் மூலம் பழநி மலையை அடைந்தனர்.இருவரையும் ஜோடியாக வந்ததால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. சரத்குமார் பட்டு வேட்டி, பட்டு சட்டையிலும்,ராதிகா மெரூன் கலர் பட்டுப்புடவையிலும் இருந்தார்.

கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு கார் மூலம் கோயம்புத்தூர் சென்று விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil