»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சரத்குமாரின் மகளை நடிக்கக் கூப்பிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளாராம் இயக்குனர்ஷங்கர்.

சரத்குமாரின் முதல் மனைவி சாயா. பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிஷப்னிஸ்டாகஇருந்தவர். நடிகைகளை விடவும் அட்டகாசமாக இருப்பவர். இவரை சரத்குமார் காதலித்துத்திருமணம் செய்து கொண்டார்.

நக்மாவுடன் தொடர்பு வந்தபிறகு மனைவியைப் பிரிந்தார் சரத்குமார். பின்னர் நக்மாவையும்விட்டுவிட்டு ராதிகாவைக் கட்டிக் கொண்டார்.

சாயா- சரத்குமார் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். இருவரும் தற்போது அம்மா சாயாவுடன் தான்வசித்து வருகிறார்கள். அவ்வப்போது சரத்குமாரை பார்த்துவிட்டுத் திரும்புகிறார்கள்.

சரத்குமார் ராதிகாவுடன் (இவருக்கும் வெள்ளைக்கார கணவர் ராபர்ட்டுக்கும் பிறந்த மகள்ரேயனுடன்) சென்னை கொட்டிவாக்கத்தில் குடியிருக்கிறார்.

சரத்குமாரின் மகள்கள் இருவரும் வளர்ந்து ஆளாகி விட்டவர்கள். இவர்களில் மூத்த பெண் தனதுஅம்மாவை அப்படியே அச்சில் வார்த்தது மாதிரி அட்டகாசமாய் இருக்கிறாராம். இவரைஓரிடத்தில் பார்த்த டைரக்டர் ஷங்கர் தனது படத்தில் நடிக்க வைக்க முயன்றுள்ளார்.

இதுதொடர்பாக முதலில் சாயாவிடம் பேசியுள்ளார். மகளை நடிக்க வைக்க சாயா ஆர்வத்துடன்இருந்ததையடுத்து சரத்குமாரிடம் பேசியுள்ளார் ஷங்கர். ஷங்கர் சொன்னதைக் கேட்டதும்ஆத்திரமடைந்தாராம் சரத்குமார்.

என்ன நினைத்து இப்படிக் கேட்கிறீர்கள். இது சம்பந்தமாக இனி மேல் பேச வேண்டாம் என்றுபட்டென்று முகத்தில் அடித்தார்போல கூறி விட்டாராம் சரத்குமார்.

இதனால் ஷங்கர் பெரும் மூட் அவுட் என்கிறார்கள். பார்க்க லட்சணமாக இருந்ததால் தான் அவரைநடிக்க வைக்க முயன்றேன். நேரடியாகவே தான் சரத்குமாரிடம் கேட்டேன். பிடிக்காவிட்டால் நாசூக்காகமறுத்திருக்கலாம் அதை விட்டுவிட்டு முகத்தில் அடித்தது மாதிரி சரத்குமார் பேசியது தான் மனதைநொறுக்கிவிட்டது என்று நண்பர்களிடம் புலம்பி வருகிறார் ஷங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil