»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கமலின் மகள் ஸ்ருதியை சினிமாவில் நுழைக்க முடிவு செய்துள்ளார் அவரது மாஜி மனைவி சரிகா.

தனது மகள்கள் சினிமாவுக்கு வரக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவர் கமல். ஆனால், இப்போது கமலைப்பிரிந்து வாழ்ந்து வரும் சரிகா, தன்னுடன் வசித்து வரும் மகள்களில் மூத்தவரான ஸ்ருதியை இந்தித் திரையுலகில்நுழைத்து விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சினிமாவில் நடிப்பதில் சரிகாவை விடவும் ஸ்ருதி மிக ஆர்வமாக இருப்பதாகவும் தெரிகிறது.

வாழ்வில் சிம்ரன் ஊடுருவியதால் கமலைப் பிரிந்தார் சரிகா. மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவுடன் மும்பையில் தனதுதாயின் வீட்டில் குடியேறினார். அங்கு மாடலிங் உடைகள் தயார் செய்து வருகிறார். ஆனால், அதில் போதியவருமானம் இல்லாததால் தமிழ் சினிமாவில் சான்ஸ் தேடி சென்னைக்கும் வந்து சென்று கொண்டிருந்தார்.

இசைஞானியின் பரிந்துரையால் தயாரிப்பாளர் தாணு தனது புன்னகைப் பூவே படத்தில் சரிகாவுக்கு ஒருபாட்டுக்கு ஆட சான்சும் கொடுத்து, பண உதவியும் செய்தார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் வாடகைக்குவீடு எடுத்து வசித்து வருகின்றனர் சரிகாவும் குழந்தைகளும்.

அதே நேரத்தில் அடிக்கடி மும்பைக்கும் சென்று மாடலிங் உடைகள் டிசைன் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கேதிரும்பி விடுகிறார் சரிகா.

மும்பையில் தனக்கு வேண்டிய பாலிவுட்காரர்களைச் சந்தித்து ஸ்ருதிக்கு நடிக்க சான்ஸ்கேட்டு வந்தார்.

இந் நிலையில் சரிகாவின் அந்தக் கால தோழி நிக்கத் என்பவரின் சகோரர் மன்சூர் என்பவர் எடுக்கப் போகும்படத்தில் ஸ்ருதிக்கு ஹீரோயின் சான்ஸ் அடித்துள்ளது. தோழியின் மகன் தான் ஹீரோவாம்.

ஸ்ருதியைத் தொடர்ந்து இன்னொரு மகளான அக்ஷராவும் விரும்பினால், அவரையும் சினிமாவில் நுழைக்க சரிகாமுடிவு செய்துவிட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil