»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil


நடிகை சரிதா தனது கணவரும் நடிகருமான முகேஷை விட்டுப் பிரிந்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த சரிதா, கே.பாலசந்தரால் கன்னடப் படமான மரோ சரித்ராவில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் தமிழில் ரஜினியுடன் தப்புத் தாளங்கள் படத்தின் மூலம் கொஞ்சம் பலான கேரக்டரில் அறிமுகமானார்.

அடுத்து தண்ணீர் தண்ணீர் மூலம் முன்னணிக்கு வந்தார். தமிழ், கன்னடம், மலையாளம் என சுமார் 75 படங்களில் நடித்தார்.


இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் முகேஷை திருமணம் செய்தார். முகேஷ், சரிதாவைவிட கொஞ்சம் இளையவர் என்ற பேச்சு உண்டு.

திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திய சரிதா, டப்பிங் குரல் மட்டும் கொடுத்து வந்தார். பின்னர் விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் படத்தைத் தயாரித்தார்.

பல மடங்கு ஊதிப் போய்விட்ட இவர் சமீபகாலமாக மீண்டும் நடிக்க வந்தார். பாலுமகேந்திராவின் ஜூலி கணபதியில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இந் நிலையில் கணவருக்கும் சரிதாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது கணவரை விட்டுப் பிரிந்து நிரந்தரமாக சென்னையில் குடியேறிவிட்ட சரிதா விரைவில் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil