»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சீதா சோகத்தில் உள்ளதால் அவருடைய "காதல் கணவர்"பார்த்திபன் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.

"மாறன்" படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் சீதா. ஆனால்ஒரு படம்கூட இதுவரை வரவில்லை.

இதையடுத்து தெலுங்கு பக்கம் தலையைக் காட்டிப் பார்த்தார். ஓரிரு படங்கள் தேறினாலும் தற்போதுஅங்கும் சீதாவுக்குக் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

படத்தில் நடிப்பதற்காகக் பார்த்திபனுடன் சண்டை போட்டுக் கொண்டு வீராப்பாகக் கிளம்பி வந்தசீதா, இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் சோகத்தில் தவிக்கிறார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட "காதல் கணவர்" ரொம்பவும் சந்தோஷமாக உள்ளாராம்.

"இன்னும் கொஞ்ச நாட்களில் அவராகவே என்னைத் தேடிக் கொண்டு வருவார், பாருங்கள்" என்றுமனைவி குறித்து நெருங்கியவர்களிடம் கூறி வருகிறாராம் பார்த்திபன்.

ரேவதி-சுரேஷ் மேனனும் "டுமீல்":

இதற்கிடையே நடிகை ரேவதிக்கும் அவருடைய கணவர் சுரேஷ் மேனனுக்கும் இடையேயும் கருத்துவேறுபாடு முற்றியுள்ளதாம்.

இருவரும் தற்போ தனித் தனியாக வசிப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். தனியாகப்பிரிந்து சென்று பல நாட்களாகி விட்டதாம். பேச்சுவார்த்தையும் அறவே இல்லையாம்.

ரகுவரன்-ரோஹிணி விவகாரத்திற்கு முன்பே இது நடந்து விட்டதாம். அட தேவுடா?

"பாபா" ஸ்டைல் "கீதை":

விஜய் நடிக்கும் "கீதை" கிட்டத்தட்ட "பாபா" ஸ்டைல் கதையாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஏகப்பட்ட சக்தி மறைந்து கிடக்கிறது, அவர் உலகையே ஆளுவார்என்ற ரீதியில் அமைந்ததுதான் "பாபா" கதை.

படம் ஊத்திக் கொண்டது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினியை பெரிய லெவலுக்குக் கொண்டுபோயுள்ளனர் அந்தப் படத்தில்.

கிட்டத்தட்ட அதே ஸ்டைலில்தான் "கீதை" படத்தின் கதையும் உள்ளதாம். குறிப்பிட்ட வயதில்உலகையே தன் பக்கம் திருப்பும் வகையில் பல அற்புதங்களை விஜய் பண்ணுவார் என்ற ரீதியில்கதை செல்கிறதாம்.

ஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாக இருந்தாலும் அவருடைய சக்தி வெளியே தெரியும்போதுஅவரே பிரமிப்பிப்பார் என்று கதை பின்னியுள்ளார்களாம்.

எங்கேயோ இடிக்குதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil