ரன் நடிகைக்கு பிரைட் நடிகர் மேல எல்லாம் கோபம் இல்லையாம்.. அவரோட மனைவி மேலதான் காண்டாம்?
சென்னை: ரன் நடிகையை தொடர்ந்து ஆயா என்றும் ஆன்ட்டி நடிகை என்றும் ஒரு பிரபல நடிகை கலாய்த்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அது வேற யாருமில்லை என்றும் பிரைட் நடிகரின் மனைவி நடிகை தான் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின. இந்நிலையில், சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் ரன் நடிகை பிரைட் நடிகரை அசிங்கப்படுத்த காரணமும் அந்த நடிகரின் மனைவி மேல் உள்ள கோபம் தான் என்கின்றனர்.
எப்படியாவது மீண்டும் மாஸ் நடிகருடன் இணைந்து ஒரு பாடலிலாவது ஆடி விட வேண்டும் என ரன் நடிகை ரொம்பவே பிட்டு போட்டு வருகிறாராம். ஆனால், அந்த இடத்துக்கும் சின்ன நம்பர் நடிகை தொடர்ந்து கடும் போட்டி போட்டு வரும் நிலையில், டாப் நடிகை ரன் நடிகைக்கு வாய்ப்புக் கொடுத்த நிலையிலும், தொடர்ந்து மாஸ் நடிகரின் மனதில் இடம்பிடிக்கவே ரன் நடிகை முயற்சித்து வருகிறார் என்கின்றனர்.

கதை இப்படி ஓடிக்கொண்டிருக்க இடையே அந்த பிரைட் நடிகரை ஏன் இப்படி போட்டு அடித்து விட்டார் என்கிற பஞ்சாய்த்து தான் பெரிதாக வெடித்துள்ளது என்கின்றனர்.
ரன் நடிகை திட்டவட்டம்: பிரைட் நடிகருடன் சில படங்களில் ஜோடி போட்டு ஆரம்ப காலத்திலேயே ரன் நடிகை நடித்திருந்தாலும், லைட் நடிகையை அவர் திருமணம் செய்துக் கொண்டதில் இருந்து ரன் நடிகைக்கு அவரை சுத்தமாக பிடிக்கவில்லை என்கின்றனர். அதற்கு காரணமே தனக்குப் போட்டியாக இருந்து ஓவர் சீன் போட்டிருந்த நடிகை இப்போ ஓரங்கட்டப்பட்ட நிலையில், நாம இன்னும் டாப்பில் இருக்கிறோம் என்கிற தற்பெருமை தான் என்கின்றனர்.கதை இப்படி ஓடிக்கொண்டிருக்க இடையே அந்த பிரைட் நடிகரை ஏன் இப்படி போட்டு அடித்து விட்டார் என்கிற பஞ்சாய்த்து தான் பெரிதாக வெடித்துள்ளது என்கின்றனர்.
பிரைட் நடிகரை பிடிக்காது: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவை விட வன்மத்தை கக்க வைக்கும் அளவுக்கு தொகுப்பாளர்களே கோர்த்துவிடும் வேலையை அந்த ரன் நடிகையிடம் செய்த நிலையில், பிரைட் நடிகரை பிடிக்காது என்கிற தொனியில் அவர் ஆரம்பத்திலேயே அடித்து விட்டது பிரைட் நடிகரின் மனைவியை ரொம்பவே ஹர்ட் பண்ணி விட்ட்டதாகவும் தொடர்ந்து இருவருக்கும் இடையே பனிப்போர் வெடித்து வருவது உண்மை தான் என்றும் கூறுகின்றனர். அதே சமயம் மாஸ் நடிகர் பக்கமும் நடிகையின் அக்கறை அதிகம் இருக்க சில காரணங்களும் இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











