»   »  ஷகீலா வீட்டில் விஜய்!!

ஷகீலா வீட்டில் விஜய்!!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
விஜய் படத்தில் நடிக்க ஹீரோயின்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவும் நிலையில் சத்தமே போடாமல், ஷகீலா இடம் பிடித்து நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு 'போக்கிரி' பொங்கல் வைத்த விஜய் அடுத்து அதிரடியாக களம் இறங்கியிருக்கும் படம் அழகிய தமிழ் மகன். அசத்தல் நமீதா, கலக்கல் ஷ்ரியா என இதில் விஜய்க்கு இரு ஜோடிகள்.

படத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. அதுதான் ஷகீலா. இவரும் படத்தில் இருக்கிறாராம். அதிலும், நடிகை ஷகீலாகவே இப்படத்தில் நடித்துள்ளாராம் ஷகீலா.

ஏற்கனவே விக்ரமின் தூள் படத்தில் ஷகீலாவாகவே வந்து போயிருந்தார். இதையடுத்து இப்போது மறுபடியும் நடிகையாகவே இப்படத்தில் நடித்துள்ளார்.

படத்தில் ஷகீலாவின் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவராக விஜய் வருகிறாராம். இந்தக் காட்சியில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது கிளுகிளுப்பாக இருக்குமே என்பதற்காக ஷகீலாவை நடிக்க வைத்து விட்டார்களாம்.

படத்தில் ஷகீலா வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஜிலுஜிலுப்பாக இருக்குமாம்.

ஷகீலா, விஜய் படத்தில் நடிப்பது இது முதல் முறையல்ல. ஆரம்பத்தில் வளரும் ஹீரோவாக விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு படத்தில் (ரசிகன்?) ஒரு பாட்டுக்கு ஷகீலாவும் சேர்ந்து ஆடியிருப்பார். அப்போது இப்போது உள்ள ஷகீலாவைப் போல இல்லாமல், படு ஸ்லிம்மாக இருப்பார் ஷகீலா.

ஒரு பக்கம் நமீதா, இன்னொரு பக்கம் ஷ்ரியா, நடுவில் ஷகீலாவா? அசத்தல்தான்!

Read more about: heroine, namitha, pokkiri, pongal, shakeela, shriya, vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil