»   »  ஷகீலா மீது பாய்கிறார் ஷர்மிலி

ஷகீலா மீது பாய்கிறார் ஷர்மிலி

Posted By:
Subscribe to Oneindia Tamil


"கவர்ச்சி தர்பூசனி" ஷர்மிலி தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்திக்கு, "கவர்ச்சி வெடிகுண்டு" ஷகீலாதான்காரணம் என ஷர்மிலி படு கோபமாக இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் காமெடி கலந்த கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஷர்மிலி. கோவை சரளாவுக்குபதிலாக ஷர்மிலியை தனக்கு ஜோடியாக போடுமாறு கவுண்டமணி சிபார்சு செய்து கொண்டிருந்தார். அப்போதுதமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையாக கவுண்டமணிக்கும் செல்வாக்கு இருந்ததால், அவரதுபுண்ணியத்தில ஷர்மிலிக்கு நிறைய படங்கள் வந்தன.

படங்கள் அதிகம் கிடைத்த சந்தோஷமோ என்னமோ, ஷர்மிலியின் உடல் குறுக்கு வெட்டில் அதிகரித்துக்கொண்டே போனது. அப்போது மலையாள கவர்ச்சிப் படங்களில் நடித்து கேரளாவையே கிறங்கடித்துக்கொண்டிருந்தார் ஷகீலா. அவரது புகழ் கொடியை கீழிறக்க ஷர்மிலியை அழைத்துக் கொண்டு போனார்கள்.

ஷர்மிலி வந்த நேரத்தில் ஷகீலாவுக்கு மார்க்கெட் அவுட் ஆனது. இதனையடுத்து ஷகீலா கோலிவுட்டுக்குவந்துவிட அவரது இடத்தைப் பிடித்தார் ஷர்மிலி. ஆனால் இவருக்கும் மலையாளத்தில் மார்க்கெட் டவுன் ஆகத்தொடங்கியது.

எனவே ஷகீலாவைப் பின்பற்றி இவரும் தமிழ் திரையுலகுக்குத் திரும்பினார். கடும் தேடலுக்குப் பின் ஜோர்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தைத் தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புள் ஏதும் இல்லை. காரணம் என்னவென்றால் இவருக்கு முன்பாகவே தமிழுக்குத் தாவிவிட்ட ஷகீலா கவர்ச்சி + காமெடி ரோல்களை எல்லாம் வளைத்து விட்டார்.


இந் நிலையில் தான் விஷம் குடித்து ஷர்மிலி தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட்டில் வதந்தி பரவியது.இதனால் அதிர்ந்து போன ஷர்மிலி தான் நலமுடன் இருப்பதாக அவராகவே ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும்போன் செய்து கூறி வருகிறார்.

மேலும், இந்த பொய் செய்திக்கு ஷகீலாதான் காரணம், எனது வரவைப் பொறுக்காமல், பொறாமையால் இப்படிச்செய்தி பரப்பியுள்ளார் அவர். ஷகீலாவை சும்மா விட மாட்டேன் என்று பொங்கிப் பொங்கி கூறுகிறாராம்.

இவர்கள் எங்கேயாவது நேரில் சந்தித்துக் கொண்டால் நிச்சயம் குடுமிப்பிடி சண்டை நடக்கும் என்றும், அப்போதுஒரு சுமோ மல்யுத்தத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil