»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தனது தாயாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்து வருகிறார் ஷெரீன்.

பெங்களூரில் மாடலிங்கில் இருந்தபோது பட ஆண் மாடல்களுடன் ஷெரீனுக்கு பழக்கம் உண்டு. அதில் பெட்ரோல் பங்க் அதிபரின் மகனான ரோஹன் என்பவரை ஷெரீன் சமீப காலமாக காதலிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவரைக் கூட்டிக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர ஆரம்பித்தார்.

வாய்ப்புக்கள் குறையவே பெங்களூர் திரும்பினார், சமீபத்தில் ரோஷனுக்கும் ஷெரீனுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது (செய்தியை நாம் அன்றைய தினமே வெளியிட்டோம்).

ஆனால், இந்தத் திருமணத்தில் ஷெரீனின் தாயார் யசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பமில்லையாம். நடித்துப் பணம் ஈட்ட வேண்டிய இந்த நேரத்தில் காதல், திருமணம் தேவையில்லை என்பது அவரது வாதமாம். இருந்தாலும் நெருக்குதல் தந்து நிச்சயதார்த்ததை நடத்தினார் ஷெரீன். இதற்கு அவரது தந்தை கூட வரவில்லை. அவர் வளைகுடாவில் பணியாற்றி வருகிறார்.

இந் நிலையில் கடந்த வாரம் கோவையில் நடந்த சத்யராஜின் 25வது திரையுலக ஆண்டு விழாவில் நடிகைகள் ரம்பா, ஷர்மிலி, பூமிகாவுடன் நடனமாட வந்தார் ஷெரீன். கூடவே அவரது தாயாரும் வந்தார்.

நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த அரங்கிற்கு ரோஹனும் வந்து சேர்ந்தார். இதையடுத்து ஷெரீனும் ரோஹனும் தனியே போய் பேச ஆரம்பித்தனர். இதைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் யசோதா.

இதையடுத்து பெங்களூர் திரும்பியதும் தாய்- மகள் மோதல் பெரிதானதாகத் தெரிகிறது. ரோஹனுடன் பேசவே யாசோதா தடை போடவே, வீட்டை விட்டே வெளியேறிவிட்டாராம் ஷெரீன்.

அதே நேரத்தில் இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கும் ஷெரீன், பட வாய்ப்புக்களை இழக்க விரும்பவில்லை. இதனால், சில நாட்களுக்கு முன் சென்னை வந்து சில சினிமா நிருபர்களை மட்டும் அழைத்து ரோஹனும் நானும் நண்பர்கள் தான். நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இப்போது சான்ஸ்களுக்கா காத்திருக்கிறார் ஷெரீன். இனி அவரை கோடம்பாக்கம் திரும்பிப் பார்க்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil