»   »  மன்மதனின் மகா குழப்பம்!

மன்மதனின் மகா குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

நமீதாவின் மேனேஜர் மீது படு கடுப்பாக இருக்கிறாராம் சிம்பு. அந்த பெண் மேலாளரால் நமீதாவுடன் ஜோடி சேருவது தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்தான் இந்த கோபமாம்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கு நிப்பாரு என்பார்கள் கிராமப்புறங்களில். அது இப்போது சிம்புவின் கெட்டவன் படத்தில் உண்மையாகியுள்ளது. சிம்பு நமீதாவுடன் நடிக்க விருப்பமாக இருந்தாலும், அது முடியாது போலிருக்கே என்ற நிலையை உருவாக்கி வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் விஸ்வநாதன்.

வல்லவனைக் கொடுத்த கையோடு அமெரிக்காவுக்குப் போயிருந்த சிம்பு அங்கிருந்து திரும்பி வந்த பின்னர் இரண்டு படங்களில் நடிக்க தீர்மானித்தார். ஒன்று கெட்டவன், இன்னொன்று காளை.

இரண்டு படங்களின் பணிகளும் ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக தொடங்கின. இப்போது கெட்டவன் படம் தொடர்பாக ஒரு புதுக் குழப்பத்தில் சிக்கியுள்ளார் சிம்பு.

கெட்டவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடி போடுபவர் லேகா வாஷிங்டன். மாமி வேடத்தில் நடிக்கிறாராம் லேகா. படத்தில் இவருக்கு தயிர் என்றுதான் செல்லப் பெயராம்.

இவர் தவிர 2 மாதங்களுக்கு முன்பு நமீதாவை புக் செய்தார் சிம்பு. இரண்டாவது நாயகி ரோலுக்குத்தான் நமீதா புக் ஆனார். அந்தக் கேரக்டர் படு கிளாமரானது. நமீதாதான் அதற்கு சரியான ஆள் என்று கருதியதால்தான் நமீதாவை புக் செய்தார் சிம்பு.

ஆனால் படத்தில் புக் ஆன பின்னர் நமீதாவின் லேடி மேனேஜர் சில குழப்பங்களைச் செய்துள்ளார். கெட்டவன் படத்துக்காக கொடுத்த கால்ஷீட்களை வேறு படத்திற்கும் கொடுத்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் விஸ்வநாதன் கடுப்பாகி விட்டார்.

அதேபோல சிம்புவும் கூட இம்சையாகி விட்டார். தயாரிப்பாளரிடம் போய், பேசாமல் மந்திரா பேடியை பார்த்து பேசி புக் பண்ணிடுங்க என்று கூறி விட்டார். அவரும் அடுத்த போனைப் போட்டு மந்திராவிடம் பேசியுள்ளார்.

அவருக்கும் சிம்புவுடன் இணைய விருப்பமாம். ஓ.கே. சொல்லியுள்ளார். படத்தில் மந்திரா 2வது நாயகியாக நடிக்காவிட்டாலும் கூட எப்படியாவது அவருக்கு அருமையான கேரக்டரைக் கொடுப்பார் சிம்பு என்கிறார்கள்.

பஞ்சாயத்து இப்படிப் போய்க் கொண்டிருக்கையில், நமீதா நடிக்கவுள்ள கேரக்டர் குறித்து அறிய வந்த துள்ளுவதோ இளமை ஷெரீன், துள்ளிக் குதித்து சிம்புவை அணுகி, நானே நடிக்கிறேனே என்று வலியக்கக் கூறியுள்ளாராம். அத்தோடு நில்லாமல் தயாரிப்பாளரையும், இயக்குநர் நந்துவையும் அணுகி நான் நடிக்கிறேன் ப்ளீஸ் என்று அணத்தியுள்ளாராம்.

நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த நமீதா, சிம்புவைத் தொடர்பு கொண்டு, மேலாளர் செய்த குழப்பத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்.

இங்குதான் வந்தது மகா குழப்பம். ஏற்கனவே புக் ஆன நமீதாவை வைத்துக் கொள்வதா, அல்லது புதிதாக புக் ஆன மந்திராவை ஏற்பதா அல்லது இரண்டு பேரையும் விட்டு விட்டு ஷெரீனை போடுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் சிம்பு.

மன்மதனுக்கே குழப்பமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil