»   »  ஷெரீனுக்காக ஒரு சண்டை!

ஷெரீனுக்காக ஒரு சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil


இயக்குநர் தருண் கோபியும், சிம்புவும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று கோலிவுட்டில் படு சூடாக ஒரு செய்தி பரவிக் கொண்டுள்ளது.

இவர்களின் சண்டைக்குக் காரணம் ஷெரீனாம். சிம்பு நடிக்க, தருண் கோபி இயக்க உருவாகி வரும் படம் காளை. இதில் சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடிக்கிறார். ஷெரீனுக்கு படத்தில் முக்கியப் பாத்திரம் கொடுத்துள்ளனர்.

திமிரு படத்துக்குப் பிறகு தருண் கோபி இயக்கும் படம் இது. படத்தில் நடிக்கும் ஷெரீனுக்கும், தருண் கோபிக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் நெருங்கிப் பழகுகிறார்களாம். இந்த நட்பின் அடிப்படையில் ஷெரீன் ரோலை செமத்தியானதாக மாற்றியுள்ளார் கோபி.

இது சிம்புவுக்குப் பிடிக்கவில்லையாம். மேலும், ஷெரீனுடன் தருண் நட்பாக இருப்பதும் அவருக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதாம்.

மேலும் படத்தின் தொடக்கத்திலிருந்தே அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்துள்ளார் சிம்பு. அது சரியில்லை, இதை மாற்றுங்கள், இது இப்படி இருக்கக் கூடாது என்று தருண் கோபியை டாமினேட் செய்து வந்துள்ளார் சிம்பு.

கிட்டத்தட்ட பொம்மை இயக்குநர் போல மாறியுள்ளார் தருண் கோபி. இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காட்சியை படமாக்கியுள்ளார் தருண் கோபி. அப்போது ஷெரீனும் அங்கு இருந்துள்ளார்.

அந்தக் காட்சியை எப்படி ஷூட் செய்வது என்று சிம்பு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துள்ளார். இது தருண் கோபிக்குப் பிடிக்கவில்லை. அடுத்து என்ன நடந்துத என்று யூனிட்டில் சம்பந்தப்பட்ட காட்சியை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சிம்புவின் உத்தரவை தருண் கோபி ஏற்கவில்லை. கடும் கோபமடைந்த அவர் சிம்புவை அடித்து விட்டார்.

இதை எதிர்பார்க்காத சிம்பு அதிர்ச்சி அடைந்து விட்டார். உடனே சுதாரித்துக் கொண்டு பாய்ந்து சென்று தருண் கோபியை சரமாரியாக அடித்தார். இருவரும் கட்டிப் புரண்டு  தாறுமாறாக அடித்துக் கொண்டனர்.

இதைப் பார்த்து மிரண்டு போன யூனிட் ஆட்கள் உள்ளே புகுந்து இருவரையும் விலக்கி விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. 2 நாள் மயான அமைதிக்குப் பின்னர் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியதாம்.

இது நிஜமா என்று தருண் கோபியிடம் கேட்டபோது, இதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் போட்டி காரணமாக சிலர் கிளப்பி விட்டுள்ள வதந்தி இது. உண்மையில் நானும், சிம்புவும் நல்ல புரிதலுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். படம் இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் என்றார்.

ஆனால், ஷெரீனும், தருண் கோபியும் நெருக்கமாக பழகுவதை விரும்பாமல்தான் சிம்பு இவ்வாறு நடந்து கொள்வதாக யூனிட் ஆட்கள் கிசுகிசுக்கிறார்கள்.  ஆனால் இதையும் தருண் கோபி மறுக்கிறார். ஷெரீன் எனது நல்ல தோழி. எங்களது நட்பு, இயக்குநர், நடிகையையும் தாண்டியது. இது அனைவருக்குமே தெரியும் என்றார்.

இந்த சச்சரவு செய்தி குறித்து சிம்பு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வழக்கம் போல அமைதி காக்கிறார்.

தியேட்டருக்கு வந்து 'ஜல்லிக்கட்டை' நடத்துவார்கள் என்று பார்த்தால் செட்டிலேயே சிலம்பிக் கொள்கிறார்களே!

Read more about: fight sherin simbu tarun gopi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil