»   »  சிம்ரனின் சம்பள சில்மிஷம்!

சிம்ரனின் சம்பள சில்மிஷம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்யாணமாகி, குழந்தை பெற்ற பிறகும் கூட மிதப்பில் தான் இருக்கிறாராம் சிம்ரன். வாய்ப்பு தர தேடி வருகிறவர்களிடம் குண்டக்க மண்டக்க சம்பளம் கேட்டு தாறுமாறாக ஓட வைக்கிறாராம்.

சின்னப் பெண்ணாக பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி, விஐபி மூலம் முதன் முதலில் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தவர் சிம்ரன். நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், பிரியமானவளே என சிம்ரன் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆக நம்பர் ஒன் நாயகியானார்.

படு வேகமாக போய்க் கொண்டிருந்த சிம்ரன், திடீரென தீபக்கைக் கல்யாணம் செய்து கொண்டு சூட்டோடு சூடாக ஒரு குழந்தைக்கும் தாயானார்.

இடையில் தொய்ந்து போயிருந்த உடலை தேற்றிக் கொண்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பிய சிம்ரன் பட வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார்.

அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்தில் நடித்தார். இதில் சிம்ரனுக்கு 40 லட்சம் சம்பளமாம். அதேபோல மலையாளத்திலும் ஹார்ட் பீட் படத்தில் ஒப்பந்தமானார். இதில் 35 லட்சம் சம்பளமாம்.

தமிழைத் தவிர மற்ற மொழிப் படங்கள் குவிந்து கொண்டிருந்த நிலையில் தமிழில் அவரைத் தேடி பெரிய அளவில் வாய்ப்பு ஏதும் வரவில்லை. வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டு சிலர் வந்தபோது கடுப்பாகிப் போனார் சிம்ரன்.

இப்படியாக வந்த வாய்ப்புகளைத் தட்டிக் கழித்து வந்த சிம்ரன் சமீபத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் சிம்ரன் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி வைத்துக் கேட்கிறாராம். அதாவது 35 லட்சம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்கிறாராம் சிம்ரன்.

விஜயகாந்த்தின் 150வது படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தரப்பு சிம்ரனை அணுகியபோது இதே சம்பளத்தைக் கூறினாராம். கடுப்பாகிப் போன தயாரிப்பு தரப்பு வேற ஆளைப் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விருட்டென்று வெளியேறி விட்டதாம்.

இதே சம்பளப் பிரச்சினை காரணமாகவே பார்த்திபனின் படம் ஒன்றையும் இழந்துள்ளார் சிம்ரன். இப்படியாக தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சம்பளத்தைத் தூக்கிக் கேட்டு வாய்ப்புகளை தூக்கிப் போட்டு வருகிறாராம் சிம்ரன்.

இதெல்லாம் கொஞ்சம் போல ஓவர்தானுங்க மேடம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil