For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "கிசு கிசு" கார்னர்

  By Staff
  |

  ராஜூ சுந்தரம்-சிம்ரன் காதல் முறிவு அபிஷியலாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

  இது குறித்து ராஜூ சுந்தரமே ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.

  டான்சராக இருந்து மாஸ்டராகி முன்னணி ஹீரோயினான சிம்ரனையே ராஜூ மடக்கியபோது திரையுலகமேஆச்சரியத்துடன் தான் பார்த்தது. இந்தக் காதலை மையமாக வைத்தே ஐ லவ் யூ டா என்ற படமும்தயாரிக்கப்பட்டுள்ளது.

  இதில் ஹீரோவாக ராஜூ சுந்தரமும் ஹீரோயிாக சிம்ரனும் நடித்துள்ளனர். இன்னும் இந்தப் படம் கூட வெளியாகாதநிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

  இந்தப் பிரிவில் சகலகலா நடிகருக்கு மிகப் பெரிய பங்கிருப்பதாகக் கூறப்படுகிறது.

  அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த பின்னர் தான் சிம்ரனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியஆரம்பித்ததாக ராஜூ கருதியுள்ளார். இது குறித்து சிம்ரனிடம் ராஜூ விளக்கம் கேட்க எடுத்தெறிந்து பேசஆரம்பித்துள்ளார் சிம்ரன்.

  இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி வந்த இருவரும் இப்போது முழுவதுமாக ஒதுங்கிக்கொண்டுவிட்டனர். எங்கள் இடையில் எந்த உறவும் இல்லை என்று ராஜூ பேட்டி தந்துள்ளார்.

  அந்தப் பேட்டி விவரம்:

  நான் இது பத்தி யார்கிட்டேயும் பேசாமல் இருந்தேன். நானும் சிம்ரனும் காதலித்தது உண்மை தான். ஆனா, இப்போபிரிஞ்சிட்டோம். எங்கள் காதல் முறிஞ்சு போச்சு. இப்போ சிம்ரன் ஒரு நடிகை. நான் ஒரு டான்ஸ் மாஸ்டர்.அவ்வளவு தான்.

  நாங்கள் பிரிஞ்சதுக்குக் காரணம் மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் தான். வேற எதையும் சொல்ல விரும்பலை, அந்தப்பெண்ணை காயப்படுத்துற மாதிரி எதையும் நான் சொல்லமாட்டேன்.

  நாங்கள் மீண்டும் சேரவும் வாய்ப்பில்லை. பிரிஞ்சது பிரிஞ்சது தான். நான் இப்போ ரொம்ப சந்தோஷமாஇருக்கேன். நான் வேலையில பிசியா இருக்கேன். இந்த லவ் பிரேக் எல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தாது. அந்தமாதிரி தான் என் மனசை நான் வச்சுருக்கேன் என்று ராஜூ கூறியுள்ளார்.

  ஒரு ஆங்கில இதழின் நிருபர் சிம்ரனிடம் ராஜூ குறித்துக் கேட்டபோது, ஹூ இஸ் ராஜூ சுந்தரம்? என்றுஅவரிடமே சிம்ரன் திருப்பிக் கேட்டாராம். இதனால் நிருபர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

  இது குறித்து ராஜூவிடம் கேட்டபோது, எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு என்கிட்டேயே கேட்குறீங்களே சார் என்றார்தொங்கிப் போன முகத்துடன்.

  ராஜூவின் இந்தப் பேட்டியின் மூலம் இருவரிடையே பிரிவு ஏற்பட்டது அதிாரப்பூர்வமாகவேஅறிவிக்கப்பட்டுவிட்டது.

  இப்போது எல்லோரும் தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பது சிம்ரனின் அடுத்த மூவ்வை தான்.

  சிம்ரனுக்கும் தனது கணவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள நட்பால் வெறுத்துப் போயுள்ளார் சகலகலா நடிகரின்மனைவி. அந்த வீட்டில் கடும் சண்டை நடந்து வருகிறதாம். அவ்வப்போது மனைவி மும்பைக்குப்போய்விடுகிறாராம்.

  சிம்ரனுடனான தனது நட்பு குறித்து சகலகலா நடிகர் வெளிப்படையாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  ஐ லவ் யூ டாவில் கிரிக்கெட் வீரராக நடித்த ராஜூவை ரன் எடுக்க வைத்து விட்டார் சிம்ரன்.

  அடுத்து சகலகலா நடிகரின் வீட்டுக்கார அம்மாவையும் ஓட வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

  பி.கு: இதற்கிடையே ஐ லவ் யு டா படத்தை வாங்க எந்த வினியோகஸ்தரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

  இவர்களின் ஒரிஜினல் லவ்வை நம்பித் தான் படமே எடுக்கப்பட்டது. அந்த லவ்வை ஹை-லைட் செய்துதான்படத்தையே ஓட்ட வினியோகஸ்தர்கள் நினைத்திருந்தனர்.

  இப்போது அந்த லவ்வே இல்லை என்று ஆகிவிட்டதால், இந்தப் படமே வேண்டாம் என்று வினியோகஸ்தர்கள் ஓடஆரம்பித்துள்ளார்கள்ளாம்.

  இதனால் தயாரிப்பாளர் நொந்து போய் உள்ளார்.

  காதலே உன் பெயர் தான் ஏமாற்றமா? (எத்தனை பேருக்கு!)

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X