»   »  சிம்ரனுக்கு கல்தா ஏன்?

சிம்ரனுக்கு கல்தா ஏன்?

Subscribe to Oneindia Tamil
Simran
ரஜினியின் குசேலன் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை சிம்ரன் நழுவ விட்டது குறித்த பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்ரன் போட்ட ஏகப்பட்ட கண்டிஷன்கள்தான் அந்த வாய்ப்பு பறி போகக் காரணமாம்.

ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிம்ரன் நழுவ விடுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் சிம்ரன்தான் நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதைக் கூறி படத்திலிருந்து விலகிக் கொண்டார் சிம்ரன்.

உண்மையில் அவர் போட்ட கண்டிஷன்கள் ஏற்கப்படாத காரணத்தால்தான் படத்திலிருந்து விலகினார் என்று பின்னர் கூறப்பட்டது. இப்போதும் அதே காரணத்திற்காக குசேலன் படத்திலிருந்தும் விலகியுள்ளார் சிம்ரன்.

குசேலன் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரனை இயக்குநர் பி.வாசு அணுகியபோது, பல நிபந்தனைகளைப் போட்டாராம் சிம்ரன்.

அவர் போட்ட கண்டிஷன்களை எல்லாம் கேட்ட பின்னர் ரஜினியுடன் பேசியுள்ளார் வாசு. இவ்வளவு கண்டிஷன் போட்டால் சிம்ரன் தேவையில்லை என்று ரஜினி கூறி விடவே உடனடியாக சிம்ரனை நீக்க முடிவு செய்து விட்டார் வாசு.

அதன் பிறகே தபுவிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கினாராம் வாசு. ஒரிஜினல் படத்தில் நடித்த மீனாவிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.

சிம்ரன் குசேலன் படத்தில் நடிக்காததற்கு இன்னொரு காரணமும் கிசுகிசுக்கப்படுகிறது. ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு நிகழ்ச்சியில் சிம்ரன் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக சிம்ரனுக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில் ரஜினி படத்தில் நடித்தால் ஜெயலலிதா தரப்பினரின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடுமோ என்ற குழப்பத்தால்தான் வேண்டும் என்றே ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு படத்திலிருந்து விலகிக் கொண்டார் சிம்ரன் என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்ற காரணத்தால்தான் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மானாட மயிலாட டான்ஸ் புரோகிராமிலிருந்தும் நீக்கப்பட்டார் சிம்ரன் என்ற புதுத் தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

மானாட மயிலாட நிகழ்ச்சியை நடத்தி வரும் டான்ஸ் மாஸ்டர் கலாதான் சிம்ரனை அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக (கலாவும், அவரது தங்கை மாஸ்டர் பிருந்தாவும் மற்ற இரு நடுவர்கள்) போட்டார் கலா.

சில எபிசோடுகள் முடிந்த நிலையில் புதுப் புது கண்டிஷன்களைப் போட்டுள்ளார் சிம்ரன். மேலும் சம்பளத்தையும் உயர்த்திக் கேட்டாராம்.

இது கதைக்கு ஆகாது என்று புரிந்து கொண்ட கலா, உடனடியாக சிம்ரனை நீக்கி விட்டு நமீதாவைப் போட்டு விட்டார்.

இப்போது நமீதாவின் தாராள கவர்ச்சியாலும், அவரது மாமூ, மச்சான் போன்ற கொழந்தைத்தனமான பேச்சாலும் மானாட மயிலாட நிகழ்ச்சி படு சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, குசேலன் படத்தில் வைகைப் புயல் வடிவேலுவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுடன் வாசு பேசி வருகிறாராம்.

சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் கலக்கல் காமெடியும் படத்தின் வெற்றிக்கு பெரும் துணையாக இருந்தது. ஆனால் சிவாஜி படத்தில் விவேக்கைப் போட்டு விட்டார் ஷங்கர்.

கிட்டத்தட்ட 2வது ஹீரோ ரேஞ்சுக்கு சிவாஜியில் விவேக்கை நடிக்க வைத்திருந்தார் ஷங்கர். வழக்கமாக ரஜினி பேசும் பன்ச் வசனங்களையெல்லாம் விவேக்கே பேசியிருப்பார். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அளவில் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் குசேலன் படம் கிராமத்து பின்னணியில் வருவதாலும், ரஜினி - வடிவேலு காம்பினேஷன் படு சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாலும், வடிவேலுவைப் போட வாசு முடிவெடுத்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil