»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்.

தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார் சிம்ரன். அதேசமயம் ரசிகர்களின்வாழ்த்துக்களை தனது தனது இணைய தளம் மூலம் ஏற்கவும் அவர் தயாராக உள்ளார்.

www.simplysimran.com என்ற அவரது இணையத் தளத்திற்குச் சென்று சிம்ரமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத்தெரிவிக்கலாம்

வாழ்த்துத் தெரிவிப்பவர்களுக்கு தனது கைபட நன்றிதெவித்து இ-மெயில் அனுப்புவாராம் சிம்ஸ்.

வயசை மட்டும் கேட்டு மெயில் அனுப்பிவிடாதீர்கள். ராஜு சுந்தரத்துக்கு ஏற்படும் கதி தான் ஏற்படும்.

கமல் பேட்டி:

இந் நிலையில் மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு கமல் வழங்கியுள்ள பேட்டியில், விரைவில் நான்சரிகாவுக்கு முன்னாள் கணவன் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

சிம்ரனால் கமலிடம் இருந்து பிரிந்த சரிகா சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதாகக் கூறியிருந்தார். இந் நிலையில்கமல் அளித்துள்ள பேட்டியில்,

சரிகா சினிமாவில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தான். அவர் என்னுடன் வசித்த காலத்திலேயே நடிக்க வாய்ப்புத் தருவதாகக்கூறினேன். ஆனால், அப்போது மறுத்தவர் இப்போது ஏன் நடிக்க வந்தார் என்று தெரியவில்லை. இருவரும் விவாகரத்துபெறுவற்கு சட்டப்பூர்வமான நடைமுறைகள் நடந்து வருகின்றன. விரைவில் நான் அவருக்கு நான் முன்னாள்கனவராகிவிடுவேன்.

என் மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவை நினைத்தால் தான் ஏக்கமாக உள்ளது. நினைத்தபோதெல்லாம் அவர்களை சந்தித்துப் பேசமுடியவில்லை (அவர்கள் சரிகாவுடன் மும்பையில் வசிக்கின்றனர்). வாரம் ஒரு முறை தான் குழந்தைகளை சந்திக்க அனுமதிகிடைத்துள்ளது. அவர்களது எதிர்காலம், படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற கவலை என்னை வாட்டி வருகிறது என்று கமல்கூறியுள்ளார்.

சரிகாவுக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 80,000 முதல் ரூ. 1 லட்சம் வரைத் தர கமல் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதைசரிகா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக சில கோடிகளை அவர் கமலிடம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் கமலைவிட்டு சிம்ரன் ஒதுங்கிக் கொண்டுவிட்டதாகவும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
மகள்கள் நிலை...

தனது மகள்களை எப்படியாவது சரிகாவிடம் இருந்து பிரித்து தன் வசம் வைத்திருக்க கமல் வைத்திருக்க விரும்புவதாகத்தெரிகிறது. சரிகாவுக்குத் துணையாக இரு மகள்களும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது. இது கமலுக்குப்பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக அக்ஷரா மற்றும் ஸ்ருதியிடம் பேசினாராம்.

ஆனால், அவர்கள் என்ன பதில் கூறினார்கள் என்று தெரியவில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil