»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

கர்ப்பம் என்று கூறி சந்திரமுகியிலிருந்து விலகினார் சிம்ரன். ஆனால் உண்மையில் அவர் கர்ப்பம் இல்லையாம்.

ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணமாகி சென்ற பிறகும் சிம்ரனுக்குக் கிடைத்தது. காரணம், நன்றாகநடிக்கக் கூடிய வாய்ப்பு அதில் இருப்பதால், சிம்ரனைப் போன்ற கிளாமர் கலந்த நடிகை சரியாக இருக்கும் என்று, சிம்ரனைப்போட்டனர்.

சில நாட்கள் படப்பிடிப்பிலும் சிம்ரன் கலந்து கொண்டார். ஆனால் இப்படி ஆட மாட்டேன், ஓட மாட்டேன், நான் கர்ப்பமாகஇருக்கிறேன், என்னால் டான்ஸ் ஆட முடியாது என்று சிம்ரன் குண்டைப் போட, படத்திலிருந்து அவரைத் தூக்கினார்கள்.

இதையடுத்து ஜோதிகாவை புக் செய்து படத்தையே எடுத்து முடித்து விட்டனர். சிம்ரன் சொன்னபடி பார்த்தால் இப்போது அவர் 6மாத கர்ப்பிணியாக இருக்க வேண்டும். உண்மையில் சிம்ரன் கர்ப்பமாகவே இல்லையாம். "நார்மலாகத்தான்" இப்போதும்இருக்கிறாராம்.

இந்த நிலையில், சிம்ரன் படத்திலிருந்து ஏன் விலகினார் என்பதற்கான உண்மையான காரணம் இப்போது தான் தெரிய வருகிறது.

கர்ப்பத்தைக் காரணம் காட்டி சிம்ரன் விலகியதற்கு உண்மையான காரணம், படத்தில் இடம் பெற்ற சில படுக்கையறைக் காட்சிகள்மற்றும் சில நெருக்கமான காட்சிகள்தான் என்கிறார்கள்.

இந்தக் காட்சிகளில் நடிக்க சிம்ரனின் கணவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இப்படிப்பட்ட காட்சிகளில் நீ இனிமேலும் நடித்துசம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் வந்து உட்காந்து ரவுசு செய்திருக்கிறார்.

இதை ரஜினி எரிச்சலோடு பார்க்க, கணவரை சமாதானப்படுத்த சிம்ரன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டதாம்.

இதையடுத்தே கர்ப்பமாக இருப்பதாக கூறி படத்திலிருந்து விலகி விட்டார் சிம்ரன் என்கிறார்கள்.

படங்களில் நடிக்காமல் விட்டதால் அவரது இடுப்பு பெருத்து விட்டதாம். தனக்கு பெயரையும், புகழையும், கோடிக்கணக்கானபணத்தையும் சம்பாதித்துக் கொடுத்த சொத்தான இடுப்பை சரி செய்து பழையபடி சிலிம் ஆவதற்காக சிறப்பு சிகிச்சை பெறஇப்போது அமெரிக்கா போயிருக்கிறார் சிம்ரன்.

கொசுறு: சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களுக்காக சிம்ரன் திடீரென்று கைவிட்டதால், கிச்சா வயசு 16 படப்பிடிப்புஅப்படியே அந்தரத்தில் தொங்குகிறது.

Read more about: chandramukhi, rajini, simran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil