»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கணவரை கதாநாயகனாக்க சிம்ரன் தீவிர வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார்.

சிக் இடுப்பு, அட்டகாசமான நடிப்பு, அசர வைக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் என்று தமிழ் ரசிகர்களின் மனதில்சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் சிம்ரன். அவரைப் பற்றி வந்த கிசுகிசுக்களை எல்லாம் தொகுத்தால், 500பக்கத்துக்கு புத்தகம் வெளியிடலாம்.

அந்த அளவுக்கு தமிழில் பாப்புலராக இருந்த சிம்ரன் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் போய் தனதுபால்ய நண்பர் தீபக் பங்காவை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டுக்கு டாடா சொன்னார்.

ஆனால், பாதியில் நிற்கும் உதயா படத்தை முடித்துக் கொடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்குப் போவேன் என்றுதயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மிரட்டவே, மீண்டும் மேக்அப் போட கணவருடன் சென்னை வந்தார்.

எஞ்சியிருந்த காட்சிகளை படமாக்கும் முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த சிம்ரன், இந்தப் படத்தை முடித்துக்கொடுக்கத்தான் வந்தேன். மீண்டும் நடிப்பது குறித்து யோசிக்கவில்லை என்றார். ஆனால் இடையில்என்னவானதோ, ஷூட்டிங் முடிந்த பின்பு தயாரிப்பாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

கல்யாணத்துக்கு அழைக்காததற்கு மன்னிப்பு கேட்டு, செண்டிமெண்ட் டாக் பேசியவர் பின்பு வாய்ப்பு கேட்டார்.கல்யாணம் ஆனாலும் சிம்ரன் மீதுள்ள அபிமானம் ரசிகர்களுக்குக் குறையாததால், தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ்கொடுக்க அவரைத் தேடிப் போயினர்.

அட்வான்களை வாங்கிக் கொண்டு ஊருக்குப் போனவர் இப்போது மீண்டும் தயாரிப்பாளர்களுக்கு எஸ்.டி.டி.போட்டு, நான் நடிக்கத் தயார், ஆனால் கதாநாயகனாக என் கணவர் தீபக்கை போட வேண்டும் போனிலேயேகுண்டு வீசி வருகிறார்.

இதனால் ஆடிப் போன தயாரிப்பாளர்கள் மண்டையை சொறிந்து யோசித்துப் போர்த்தனர்.

கொண்டுள்ளனர்.தமிழ் ரசிகர்கள் மும்பை நடிகைகளைத் தான் வரவேற்பார்களே தவிர, மும்பை நடிகர்களுக்குஆதரவு தர மாட்டார்கள். இது கோலிவுட்டின் ஓப்பன் ரகசியம். இதனால் இரு தயாரிப்பாளர்கள் பதிலுக்கு போன்போட்டு, அட்வான்ஸை டி.டியா எடுத்து திருப்பி அனுப்பிடும்மா என்று இந்தியில் சிம்ரனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.

சரி, தீபக் பங்கா என்ன வேலை செய்கிறார் என்று விசாரித்தால், சிம்ரனுக்கு கணவராக இருக்கிறாராம். நல்லவேலைதான்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil