மனைவி போட்ட கன்டிஷன்... பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஒல்லி நடிகர்
சென்னை : பிரிவதாக அறிவித்த பிறகும், அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் ஒல்லி நடிகர். அடுத்தடுத்து படங்களின் தோல்வி, தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகள் என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
பிள்ளைகளின் நலனுக்காக இருவருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. உச்ச நடிகரின் குடும்பமும் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறது. ஆனால் உச்ச நடிகரின் மகளும், ஒல்லி நடிகரும் சினிமாவில் செம பிஸியாக இருந்து வருகிறார்கள்.

பிள்ளைகள் மீது பாசம்
மனைவியை பிரிவதாக அறிவித்தாலும் பிள்ளைகள் மீது எப்போதும் பாசமாக இருப்பாராம் ஒல்லி நடிகர். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன் தான் செலவிடுவாராம். ஐதராபாத்தில் ஷுட்டிங்கை முடித்து விட்டு வந்த ஒல்லி நடிகர், பிள்ளைகளை கூட்டிக் கொண்டு ஊட்டிக்கு சென்று வந்துள்ளார். அதற்கு பிறகும் சென்னையில் இசை நிகழ்ச்சிக்கு பிள்ளைகளுடன் சென்று வந்தார். இந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பாகின.

போட்டோவால் வந்த பிரச்சனை
இதனால் ஒல்லி நடிகர் தான் பிள்ளைகள் மேல் பாசமாக இருப்பார். பிள்ளைகளுக்கும் ஒல்லி நடிகரை தான் பிடிக்கும் என பரவலாக பேச்சு அடிபட்டது. இதனால் உச்ச நடிகர் மகளை அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு பிறகு தான் பிள்ளைகளுடன் தானும் பாசமாக இருப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார் உச்ச நடிகரின் மகள். ஆனால் அந்த போட்டோக்களை பார்த்தவர்கள் இது செயற்கை தனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மனைவி போட்ட கன்டிஷன்
தொடர்ந்து இது போன்ற பேச்சுக்களால் கடுப்பான உச்ச நடிகரின் மகள், சமீபத்தில் ஒல்லி நடிகர் வந்து கூப்பிட்ட போது பிள்ளைகளை அனுப்ப மறுத்து விட்டாராம். இதனால் அதிர்ந்து போன ஒல்லி நடிகர் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து வருகிறாராம். பலமுறை கேட்ட பிறகு, ஒல்லி நடிகர் பிள்ளைகளை பார்க்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்டுள்ளாராம் உச்ச நடிகரின் மகள். அதில் முக்கியமானது, பிள்ளைகளை சந்திக்கும் போது அவர்களுடன் இருப்பது போன்ற போட்டோ எதுவும் எடுக்கக் கூடாது என்பது தானாம்.

சிக்கலில் ஒல்லி நடிகர்
அப்படியே எடுத்தாலும் அந்த போட்டோக்கள் எதுவும் வெளியே வராக் கூடாது. அப்படி வந்தால் அடுத்த முறை பிள்ளைகளை சந்திக்க அனுமதிக்க முடியாது என கண்டிப்பாக சொல்லி விட்டாராம். பிள்ளை பாசத்தால் வேறு வழியில்லாம் மனைவி போட்ட கன்டிஷன்கள் அனைத்திற்கும் ஓகே சொல்லி உள்ளாராம் ஒல்லி நடிகர். சொன்னது போலவே சமீபத்தில் பிள்ளைகளை அழைத்துக் கொண்ட வெளியில் சென்ற போது எந்த போட்டோவையும் எடுத்துக் கொள்ளாமல் வந்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











