»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்திபனின் படத்தில் நடிக்க ஸ்னேகா மறுத்துவிட்டாராம்.

கொஞ்ச காலமாக ஸ்னேகாவைப் புகழ்ந்து பேசி வந்தார் பார்த்திபன். என்ன மேட்டர் என்று நாம் உளவுபார்த்தபோது தான், தனது அடுத்த படத்தில் நடிக்க ஸ்னேகாவை அவர் அணுகியது தெரியவந்தது.

முதலில் ஓ.கே. சொன்ன ஸ்னேகா பின்னர் பார்த்திபன் பற்றிய சில ரகசிய சமாச்சாரங்களை கேள்விப்பட்டதும்நோ சொல்லி விட்டார் என்பதும் தெரியவந்தது.

இருந்தும் விக்கிராமாதித்தனின் விடா முயற்சியுடன், சான்ஸ் கிடைத்தபோதெல்லாம் ஸ்னேகாவுக்கு ஐஸ் வைத்துவந்தார் பார்த்திபன். சமீபத்தில், நடிகர் சங்கத்தில் பார்த்திபன் ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாம்நடத்தப்பட்டது.

அதற்கு ஸ்னேகாவை அழைத்திருந்தார் பார்த்தி. அவரது வற்புறுத்தல் காரணமாக வேண்டா வெறுப்புடன்வந்துவிட்டுப் போனார் ஸ்னேகா.

அங்கே ரத்த தானம் குறித்துப் பேசாமல், ஸ்னேகா ரொம்ப அழகு, வெளியில் மட்டுமல்ல, மனசிலும் அவர்தான்ரொம்ப ரொம்ப அழகு என்ற ரீதியில் பேசிக் கொண்டே போனார். அவரது பேச்சை அவரைத் தவிர வேறு யாரும்ரசிக்கவில்லை என்றாலும் கூட பேச்சு முழுவதிலும் ஸ்னேகா புராணமாக இருந்தது.

இவ்வளவு ஐஸ் வைத்தும் ஸ்னேகா கரையவில்லை என்பது தான் லேட்டஸ்ட் தகவல். பார்த்திபன் படத்தில்நடிப்பதில்லை என்ற தனது முடிவில் மிக உறுதியாக நிற்கிறாராம் ஸ்னேகா.

பார்த்திபனுடன் சமீப காலமாக நடித்த மறுத்துவிட்ட இரண்டாவது நடிகை ஸ்னேகா என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி நடிகையும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடந்தபோது சோனி டிவியில் சேலையை அணிந்தும்அணியாமல், ஜாக்கெட் போட்டும் போடமல் தனது கவர்ச்சியால் அனைவரையும் மூழ்கடித்த மந்திரா பேடி தான்முதலில் பார்த்திபனுக்கு நோ சொன்னார். இப்போது ஸ்னேகா.

பாவம் பார்த்திபன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil