»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

படத்துக்குப் படம் புதுமுகங்கள் அறிமுகமாகி சிம்ரன், கிரண், ஜோதிகா என முன்னணியில் இருந்தவர்கள் எல்லாம்படு வேகத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்க, பயந்து போன ஸ்னேகா தனது கொள்கைகளை தளர்த்தஆரம்பித்துள்ளார்.

படமே இல்லாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் அவர் தனது பிடிவாததத்தை எல்லாம் விட்டுவிட்டுதயாரிப்பாளர்களைச் சந்தித்து சான்ஸ் கேட்க ஆரம்பித்துள்ளார்.

அதே போல சைட் பிஸினஸாக படங்களை வாங்கி வினியோகிக்கும் வேலையிலும் இறங்கியுள்ளார்.

முதல் முயற்சியாக, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் படத்தை வாங்கிவினியோகித்துள்ளார் ஸ்னேகா. போட்ட காசு தேறினால் தொடர்ந்து படங்களை வாங்கி வினியோகிக்கும் முடிவில்இருக்கிறாராம்.

முதலில் சிக் என இருக்கும் சின்ன வயசு நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன், ஓல்டு நடிகர்கள் கூட நடிக்கவேமாட்டேன் என்று கூறி வந்த அவரிடம் இப்போது நிறையவே மாற்றம்.

யாராக இருந்தாலும் பராவாயில்லை, நல்ல ரோல் இருந்தால் போதும், நான் நடிக்கத் தயார் என்றுதயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சொல்லி அனுப்பி வருகிறார். நேரில் சென்றும் சான்ஸ் கேட்கிறார்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒரு தயாரிப்பாளர் பிரபு தேவாவுக்கு அவரை ஜோடியாக புக் செய்துவிட்டாராம்.படத்திற்குப் பெயர் தில்லாலங்கடியோவ்!.

(ஸ்னேகாவைப் போலவே பிரபு தேவாவும் வீட்டில் சும்மா தான் இருக்கிறார்)

இந் நிலையில் மெதுவாக காதல் கிறுக்கனின் வலையிலும் விழுந்து கொண்டிருக்கிறார் ஸ்னேகா என்கிறார்கள்.

தனக்குப் பிடித்த நடிகைகளைக் கவர பல உத்திகளைக் கையாண்டு கடைசியில் அவர்களது நட்பைப் பெற்றுவிடுவார் காதல் கிறுக்கன். அந்த வகையில் அவரிடம் பல நடிகைகள் விழுந்து பின்னர் தப்பித்ததாக அவரது மாஜிமனைவியே சமீபத்தில் புகார் கூறினார்.

சமீப காலமாக ஸ்னேகாவுக்கும் அவர் நட்புத் தூது விட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவரை ஒதுக்கியதோடு,அவரது படத்திலும் நடிக்க மறுத்தார் ஸ்னேகா. இருந்தாலும் காதல் கிறுக்கன் விடாமல் "அனத்தவே" ஸ்னேகாபக்கமிருந்து சாதகமான பதில் வந்து விட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil