»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"ஸ்ரீகாந்த் எனது நண்பர் மட்டுமே, அவரை நான் காதலிப்பதாகக்கூறுவது முழுப்பொய்" என்று மீண்டும்சொல்கிறார் ஸ்னேகா.

ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீகாந்த் - ஸ்னேகா ஜோடி சேர்ந்தனர். பின் பார்த்திபன் கனவு படத்திலும் ஜோடியாகநடித்தனர். இருவரும் காதலித்து வருவதாகப் பேசப்படுகிறது. ஆனால் இருவரும் இதை மறுத்து வருகின்றனர்.

இந் நிலையில் ஒரு வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ள போஸ்டர்களில் ஸ்ரீகாந்த்தை நான் காதலிக்கிறேன் என்றுஸ்னேகா பேட்டியளித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்னேகா கூறுகையில், அந்த பத்திரிகை நிருபரிடம் நான் அப்படிக்கூறவில்லை. ஸ்ரீகாந்த் எனதுநண்பர் என்றுதான் கூறினேன். ஆனால் நான் சொல்லாததையும் சேர்த்து எழுதியுள்ளனர்.

பேட்டி எடுத்த நிருபர்வேறு பத்திரிகைக்கு என்று கூறிவிட்டு, வார இதழுக்குக் கொடுத்துள்ளார். யாராவது இப்படி பேட்டிகொடுப்பார்களா? இதுகுறித்து நான் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் நான் எனது தொழிலைத்தவிர வேறு எதையும் காதலிக்கவில்லை. என் பெயரைக்கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அந்த பத்திரிகைக்கு ஸ்னேகா அளித்துள்ள பேட்டியில், ஸ்ரீகாந்த்தும் நானும் தினமும் ஒரு முறையாவது போனில்பேசிக் கொள்வோம். அவர் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டார் என்று சொன்னதாகத் தெரிகிறது.

ஏற்கனவே இந்த காதல் கிசுகிசு காரணமாக ஸ்னேகாவுக்கு படவாய்ப்புகள் பெருமளவு குறைந்து விட்டதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil