»   »  முழு விபரம்

முழு விபரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமீபத்தில் சின்னா படத்திற்காக ஹைதராபாத் சென்றபோது ஸ்னேகாவுக்கு சில பலான எஸ்.எம்.எஸ்கள் வந்தனவாம்.அனுப்பியது.. உடன் நடிக்கும் நடிகர் என்பதுதான் இங்கு ஹைலைட்டான விஷயம்.

சுந்தர்.சி இயக்கத்தில் அர்ஜூன், ஸ்னேகா நடிக்கும் படம் சின்னா. கிரிக்குப் பிறகு அர்ஜூனுடன் சேர்ந்து சுந்தர்ரும் சேர்ந்துசெய்யும் படம் இது. அதிரடி பிளஸ் காமெடியுடன் இப்படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர்.

சமீபத்தில் சின்னா படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அந்த சமயத்தில் ஸ்னேகாவுக்கு சில கசப்பான அனுபவங்கள்கிடைத்தன. எதிர்பாராத இடத்திலிருந்து வந்ததால் ஸ்னேகா ரொம்பவே அப்செட்டாம்.

படப்பிடிப்பு முடிந்து இரவு ஹோட்டல் அறைக்குச் சென்ற ஸ்னேகாவுக்கு சில எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அனைத்தும்மட்டரகமான ஆபாச ஜோக்குகள். கடுப்பாகிப் போய் யார் அனுப்பியது என்று விசாரித்தபோது, தன் உடன் காலையில் நடித்தநடிகர் தான் அது என்று தெரியவந்துள்ளது.

கூட நடிக்கும் முக்கிய நடிகர்தான் அந்த ஆபாச செய்திகளை அனுப்பியது என்று தெரிந்ததும் கடுப்பான ஸ்னேகா, என்னசெய்யலாம் என்று யோசித்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அனுப்பாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

இந்த அமைதியை வேறு மாதியாக அர்த்தம் பண்ணிக் கொண்ட அந்த நாயகன், தொடர்ந்து ஆபாசக் குப்பைகளை செல்போன்மூலம் ஸ்னேகாவிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

செல்போனை ஆப் செய்து சிறிது நேரம் விட்டு பின்னர் ஆன் செய்தபோது லைனில் வந்து காத்திருந்த எஸ்எம்எஸ்கள்மடமடவென கொட்டியிருக்கின்றன.

மறு நாள் காலை நேராக சம்பந்தப்பட்ட நாயகனிடம் சென்ற ஸ்னேகா, சார், நேத்து நைட் ஒரு பொறுக்கிப் பய என்று தமிழிலும்மகா கெட்டவார்த்தைளை ஆங்கிலத்திலும் சொல்லி, எனது செல்லுக்கு ஆபாச மெசேஜ்களாக அனுப்பிக் கொண்டிருந்தான்.

எனக்கு ஆத்திரம் வந்ததால் செல்போனையே உடைத்து விட்டேன் என்று கூறி உடைந்த தனது செல்போனை அவரிடம்காட்டியுள்ளார்.

அவ்வளவுதான், அந்த நாயகன் முகம் இஞ்சி திண்ண குரங்கு போல மாறிவிட்டதாம். எப்போது திருந்துவாரோ லீலைகளின்நாயகனான இந்த ஆக்ஷன் ராஜா நடிகர்.

யாராக இருந்தாலும் நேரடியாக அவர்களிடமே மோதிவிடும் தைரியசாலியான ஸ்னேகா நல்ல புத்திசாலிகூட.

தனது வருமானத்தை அங்கே இங்கே விட்டுவிடாமல் அப்படியே அசையாத சொத்துக்களாக மாற்றி வருகிறார். சென்னைவளசரவாக்கத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் ஸ்னேகா, சமீபத்தில் வட தமிழகத்தில் ஒருமுந்திரித் தோட்டத்தையும் பலாப் பழ தோட்டத்தையும் வாங்கிப் போட்டிருக்கிறார்.

ஏற்கனவே சொந்த ஊரான ஹைதராபாத்திலும் அவருக்கு பல அசையா சொத்துக்கள் உண்டு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil