»   »  அப்ப சோனியா அகர்வால்?

அப்ப சோனியா அகர்வால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எதிர்பாராமல் கிடைத்த இன்ப அதிர்ச்சியால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை தரும் இயக்குநர்களில் ஒருவராக செல்வராகவன் வளர்ந்து வருகிறார். ஷகீலா பட ரேஞ்சுக்கு முதல் படம்துள்ளுவதோ இளமையை அப்பாவின் பெயரை டைரக்டராகப் போட்டு எடுத்தார்.

நாலா பக்கமும் இருந்து கண்டனக்குரல்கள் கிளம்பின. ஆனால் இரண்டாவது படம் காதல் கொண்டேனில் எல்லோரையும் திரும்ப பார்க்கவைத்தார்.

கடைசியாக வெளிவந்திருக்கும் 7ஜி, ரெயின்போ காலனி படத்தின் மூலம் மணிரத்னம், பாலுமகேந்திரா ஆகியோரோடு ஒப்பிடும்அளவிற்கு உயர்ந்திப் பேசப்படுகிறார் செல்வராகவன்.

மூன்று படங்களிலும் செக்ஸ் கொஞ்சம் தூக்கல்தான் என்றாலும், படங்கள் ஹிட்டாகி விட்டதால் தயாரிப்பாளர்கள் எல்லாம் இவரைத் துரத்திவருகிறார்கள்.

கே.கே.நகரில் நடந்த ஒரு உண்மைக் கதை என்று 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு முதலில் விளம்பரம் செய்தார்கள். படம் ரிலீஸான பின்புபத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த செல்வராகவன், இது என் வாழ்வில் நடந்த கதை. படத்தில் 90 சதவீத சம்பவங்கள் உண்மையானவைஎன்று வெளிப்படையாகவே கூறினார்.


தோல்வியில் முடிந்து போன தனது இளமைக் கால காதலைத்தான் படத்தில் கூறியுள்ளதாக செல்வராகவன் கூறியிருந்தார். தனது நிஜமானகாதலியான அனிதாவின் பெயரைத்தான் படத்தின் நாயகிக்கும் சூட்டியிருந்ததாகவும் கூறினார்.

எனது வாழ்க்கையைப் புரட்டி போட்ட அனிதாவைப் பற்றியும், அனிதாவைச் சுற்றி நடந்த சம்பவங்களையும்தான் படமாக்கியுள்ளேன்.இப்போது அனிதா எங்கிருக்கிறார் என்பது தெரியாது. அவரைச் சந்தித்து நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார்.

இந் நிலையில் நிஜ அனிதாவே, செல்வராகவனைத் தேடி வந்துள்ளாராம். இதனால் செல்வராகவன் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இப்போது முதல் முறையாக சந்தித்துள்ளார்களாம்.

சில நாட்களுக்கு முன்பு செல்வராகவனைத் தேடி வந்த அனிதா, அவரிடம் மனமுருக பேசியுள்ளாராம். செல்வாவும் நெக்குறுகிப் போய்விட்டாராம். இருவரும் நீண்ட நேரம் ரிலாக்ஸ்டாக பேசியுள்ளனர். வரும்போது பதற்றத்துடன் வந்த அனிதா, போகும்போதுசந்தோஷத்துடன் திரும்பிச் சென்றாராம்.

அனிதாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது. அனிதாவை செல்வராகவன் கல்யாணம் செய்துகொள்வாரா என்பதுதான் கோலிவுட்டில் எல்லோரும் கேட்கும் கேள்ளவி.

அப்ப சோனியா அகர்வால்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil