»   »  மீண்டும் கமல்- ஸ்ரீ தேவி ஜோடி !

மீண்டும் கமல்- ஸ்ரீ தேவி ஜோடி !

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த, இன்றும் காதல் ஜோடிக்கு இலக்கமணமாக கூறப்பட்டு வரும் கமல்ஹாசன்- ஸ்ரீ தேவிமீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் ஆரம்பித்த கமல்- ஸ்ரீ தேவி ஜோடி, பின்னர் நடித்த பெரும்பாலானபடங்களுமே வசூலில் சாதனை படைத்தன. மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, மனிதரில் இத்தனைநிறங்களா, வறுமையின் நிறம் சிவப்பு, குரு போன்ற படங்கள் இந்த ஜோடியை உச்சிக்குக் கொண்டு போயின.

தமிழோடு, தெலுங்கிலும் சக்கைபோடு போட்ட ஸ்ரீ தேவி காலப் போக்கில் இந்திக்குப் போய் விட, கமலும் வேறு நாயகிகளை நாடத்தொடங்கினார். இருவரும் இணைந்து நடித்து சுமார் 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இந்த காலத்திற்குள் எத்தனையோ காதல் படங்களும், காதல் ஜோடிகளும் தமிழ் சினிமாவில் வந்து சென்றாலும், கமல்- ஸ்ரீ தேவிக்குஜோடிக்கு கிடைத்த இடம் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

இந்த கனவு ஜோடி மீண்டும் ஒரு தமிழ்ப் படம் மூலம் இணையவுள்ளதாம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதியபடத்தில் ஸ்ரீ தேவியும் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

படத்தைத் தயாரிக்கப் போவது கமலின் ராஜ்மகல் இன்டர்நேசனல் நிறுவனம் தானாம். முதலில் இதில் நடிக்க மாதுரி தீட்சித்தை கமல்நாடியதாகவும், ஆனால் திருமணமாகி இப்போது கர்ப்பமாக இருக்கும் அவர் நடிப்பதில் சிக்கல் இருப்பதால் ஸ்ரீ தேவியை ஜோடியாக்கிடமுடிவு செய்யப்பட்டதாம்.

படத்துக்கு கிருஷ்ணலீலாவில் ஆரம்பித்து மர்மயோகி வரை பல அந்த கால டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிரகுமார சம்பவம் என்ற டைட்டிலையும் புக் செய்து வைத்திருக்கிறார் கமல்.

இந்தி பீல்டிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட ஸ்ரீதேவி இப்போது தனது கணவர் போனிகபூருடன் இணைந்து படத் தயாரிப்பில் தீவிரம் காட்டிவருகிறார். அப்படியே சாகாரா டிவியில் மாலினி அய்யர் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் தயாராகி பின்னர் தமிழுக்கு வந்த தேவராகம் படத்தில் அரவிந்த்சாமிக்குஜோடியாக ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி அதன் பிறகு தென்னக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கிப் விட்டார்.

ஏற்கனவே திருமணமான போனிகபூரோடு காதல், திருமணம், குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவரை மீண்டும்இழுக்கிறது தமிழ் சினிமா.

கொசுறு: நவீன ரக வெளிநாட்டு ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளாராம் கமல். தனது படங்களின் ஷூட்டிங்கிற்கு இதைப்பயன்படுத்திக் கொள்ளவும், சும்மா இருக்கும் நேரத்தில் வாடகைக்கு விடவும் யோசித்து வருகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil